பிரச்சனைகளுக்கான தீர்வுகளை கண்டறிந்தால் வெற்றி நிச்சயம் GR Agarwal வெற்றி கதை | GR Agarwal Success Story in tamil

பிரச்சனைகளுக்கான தீர்வுகளை கண்டறிந்தால் வெற்றி நிச்சயம்

GR Agarwal Success Story in tamil

வாழ்க்கையில்  வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை பலருக்கு உள்ளது. வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையில் பல்வேறு வழிகளை தேர்ந்தெடுக்கின்றனர் இன்று இப்பதிவில் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டறிந்தால் எவ்வாறு வெற்றி பெறலாம் என்று கண்டறிந்து அதற்கான தீர்வுகளையும் கண்டறிந்த  G.R.அகர்வால் அவர்களின் வெற்றிப் பயணத்தை பற்றி பார்க்கலாம்

GR Agarwal Success Story in tamil
GR Agarwal Success Story in tamil

யார் G.R.அகர்வால்

குமானி ராம் அகர்வால் என்கிற G.R.அகர்வால் 60-களில் ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் வசித்து வந்துள்ளார். அந்த சமயத்தில்  அப்பகுதி பாலைவனம் போல் காட்சி அளித்துள்ளது. எங்கும் கடும் வறட்சி,முறையான சாலை வசதிகள் இல்லை. வியாபாரம் செய்பவர்கள் சுரு மாவட்டத்தில் அருகிலுள்ள கிராமங்களுக்கோ நகரங்களுக்கோ அத்தனை எளிதாக போய்விட முடியாது.

மக்கள் அவதி

மக்கள் இத்தனை அவதிப்பட்டாலும் அரசாங்கமும் சாலை வசதி ஏற்படுத்த எந்த வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் தானே சாலை அமைக்கும் நிறுவனத்தை எடுத்து நடத்தலாம் என G.R. அகர்வால் 1965-ம் ஆண்டு முடிவு செய்தார்.

முதலில் சிறு பார்ட்னர்ஷிப் நிறுவனமாக ஜெய்செல்மர் பகுதியில் உள்கட்டமைப்பு புராஜெக்ட் ஒன்றை மேற்கொண்டார். இப்படித் தொடங்கிய இவரது முயற்சி GR Infraprojects என்கிற சாலை கட்டுமானம் தொடர்பான பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான (EPC) வணிகமாக உருவெடுத்துள்ளது.

GR Infraprojects நிறுவனம் உதயம்

1995-ம் ஆண்டு ஜிஆர் அகர்வால் பில்டர்ஸ் அண்ட் டெவலப்பர்ஸ் என்கிற பெயரில் வணிகம் நிறுவப்பட்டது. 1996-ம் ஆண்டு ஜிஆர் அகர்வாலின் பார்ட்னர்ஷிப் நிறுவனத்தை வாங்கிக்கொண்டது. 2007-ம் ஆண்டு GR Infraprojects எனப் பெயர் மாற்றப்பட்டு GR Infraprojects  நிறுவனம் உதயமானது

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மற்றும் பல்வேறு மாநில அரசாங்கங்களுக்கு GR Infraprojects சேவையளிக்கிறது. 15,000 ஊழியர்கள் கொண்ட வலுவான குழுவாக இந்நிறுவனம் வெற்றிகரமான இயங்கி வருகிறது. சகோதரர்கள் ஐந்து பேரும் சேர்ந்து இந்த வளர்ச்சியை சாத்தியப்படுத்தியுள்ளனர்.

சாலை வசதி இல்லை

“எங்கள் கிராமத்தில் சாலை வசதி இல்லை. மிகவும் கஷ்டப்பட்டோம். என் அப்பா எத்தனையோ சவால்களைக் கடந்து கட்டுமான நிறுவனத்தைத் தொடங்கினார். கிராமத்தில் வாழ்ந்த எனக்கும் என் சகோதரர்களுக்கும் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒவ்வொருவராக அப்பாவின் தொழிலில் சேர்ந்துகொண்டோம். நாட்டின் சாலை கட்டுமானங்களுக்கான வாய்ப்புகள் பெருகப் பெருக எங்கள் வணிகமும் வளர்ச்சியடைந்தது,” என்கிறார் ஜிஆர் அகர்வாலின் மகன் வினோத் குமார் அகர்வால். இவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் புரொமோட்டராகவும் இருக்கிறார்.

சகோதரர்களில் ஒருவரான அஜேந்திரா குமார் அகர்வால் கூறும்போது,

வெவ்வேறு இடங்களுக்கு மாற்றலான அனுபவமும் குருகிராம் போன்ற பரபரப்பான நகரில் வசித்த அனுபவமும் சாலை கட்டுமானப் பணிகளுக்கு பெரிதும் உதவியுள்ளது.இப்படி வெவ்வேறு பகுதிகளுக்குப் பயணித்த இந்த சகோதரர்கள் ஒரு கட்டத்தில் குருகிராமில் செட்டில் ஆனார்கள்.

GR Infra வின் வெற்றி பாதை 

GR Infra நிறுவனம் சாலைகளுக்கான நிலக்கீல் பிராசஸ் செய்வது, தெர்மோபிளாஸ்டிக் பெயிண்ட், மின் கம்பங்கள், சாலை குறியீடுகள், மெட்டல் சாலை தடுப்புகள் போன்றவை தொடர்பாகவும் செயல்பட்டு வருகிறது.

டிசைன், பொறியியல் சம்பந்தப்பட்ட குழுக்கள் போன்றவை இந்நிறுவனத்திற்குள்ளேயே செயல்படுவதால் மூன்றாம் தரப்பு சப்ளையர்களை அதிகம் சார்ந்திருப்பதில்லை.

சாலை கட்டுமானப் பிரிவில் எத்தனையோ நிறுவனங்கள் செயல்படும் நிலையில் குறித்த நேரத்திற்கு முன்பாகவே பிராஜெக்டுகளை நிறைவு செய்து போட்டியாளர்களை சிறப்பாக எதிர்கொள்கிறது GR Infra. இந்நிறுவனம் நிதி ரீதியாகவும் வலுவாகவே செயல்படுகிறது.

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!