முதல்வர் ஸ்டாலின் கடந்த 2022-ல் ‘புதுமைப் பெண்’ திட்டத்தை தொடங்கினார், இது 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து, உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குகிறது. இதுவரை 3.28 லட்சம் மாணவிகள் இந்த திட்டத்தின் பயனாளிகள். தற்போது, இந்த கல்வி ஆண்டில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து உயர்கல்விக்கு சேரும் மாணவிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க
- இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க மாணவர்கள் தங்களின் பெயர் 10th, 12th சான்றிதழில் மற்றும் ஆதார் அட்டையில் சரியாக உள்ளதா என்று பார்க்கவும் மேலும் உங்களது வங்கி கணக்கு ஆதார் seeding செய்யப்பட்டுள்ளதா என்று சரி பார்க்கவும்
- மேலும் இத்திட்டத்திற்கும், விண்ணப்பிக்க உமீஸ் எனப்படும் Portal-லில் தங்களது பள்ளி படிப்பு, வங்கி கணக்கு விவ்ரங்கள், பதிவிட வேண்டும்
- உங்களது கல்வி விவரங்களை சரி பார்த்த பின்பு உங்களின் தமிழ் புதல்வன் மற்றும் புதுமை பெண் திட்டத்திற்கான எண் வழங்கப்படும்.
- அதன் பின்னர் உங்களுக்கு மாதம் மாதம் ரூ 1000 உங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
UIMS PORTAL முகவரி – Click here