June 30 Holiday Announcement
முக்கிய பண்டிகை
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஹஜ் பெருநாள்ன பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தமிழக அரசு சார்பில் இன்று முதல் சிறப்பு பேருந்துகுள் இயக்கப்படுகிறது
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
இதேபோல் தெற்கு ரயில்வேயும் சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் சேவையை அறிவித்துள்ளது. இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 30 அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
அரசு விடுமுறை
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழ்நாட்டில் ஹஜ் பெருநாள் எனும் பக்ரீத் பண்டிகை ஜூன் 29 அன்று கொண்டாடப்படவிருக்கும் நிலையில் ஜூன் 30 வெள்ளிக்கிழமை அன்று அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் எனச் சிறுபான்மை முஸ்லிம்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜூலை 1 மற்றும் ஜூலை 2 சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை என்பதால் பள்ளிக் செல்லும் மாணவ, மாணவியர்கள் மற்றும் முஸ்லிம் அரசுப் பணியாளர்கள் ஆகியோர் தனது சொந்த ஊர்களுக்கு பண்டிகை கொண்டாடித் திரும்புவதில் சிரமம் இருக்காது என்று கூறியுள்ள ஜவாஹிருல்லா, மேலும், ஒருசில கல்வி நிறுவனங்களில் ஜூன் 30 அன்று தேர்வுகளும் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Click here | |
Telegram | Click here |