Redmi 5g low cost mobile in India
Redmi 5g low cost mobile in India ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் 1-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ரெட்மி 12 5ஜி (Redmi 12 5G) ஸ்மார்ட்போன் உடன் ரெட்மி வாட்ச் 2 ஆக்டிவ் மற்றும் சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ் மாடல் உள்ளிட்ட பல சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமேசான் தளத்தில் ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போனின் டீசர் வெளியாகி உள்ளது. அதேபோல் இந்த புதிய ரெட்மி போன் ஆனது 5ஜி ஆதரவுடன் வெளிவரும். அதேபோல் இந்த போன் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
அதாவது ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.79-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும். அதேபோல் செல்ஃபி ஷூட்டருக்கான பஞ்ச்-ஹோல் கட்அவுட் டிசைன் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

விரைவில் அறிமுகமாகும் ரெட்மி 12 5ஜி ஸ்மர்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 ( Qualcomm Snapdragon 4 Gen2) சிப்செட் உடன் அட்ரினோ ஜிபியு ஆதரவு உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன்.
குறிப்பாக ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த அசத்தலான ரெட்மி ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
இந்த ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். அதேபோல் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டு இந்த ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மறறும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம். எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.
இந்த ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்;. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் மற்றும் பல சிறப்பான வசதிகளுடன் இந்த புத்தம் புதிய ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும்.
ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போனில் 5ஜி, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், என்எப்சி, வைஃபை, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. மேலும் இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் குறைந்த எடையில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன்.