எதையும் செய்ய முடியும்
என்று நீ நம்பு
ஏனெனில்
உன் மனம் அதை செய்து முடிக்கும்
வழிகளை கண்டறியும்.
நேற்றைய அவமானங்களை
இன்று வருமானமாக மாற்ற….நேற்று எகத்தாளமாக சிரித்தவர்கள்
இன்று ஏக்கத்துடன் பார்த்திட, விரைந்து எழு
சுறுசுறுப்பாக செயல்படு
வெற்றி நிச்சயம்.
தோற்றங்கள் மாறினாலும்..
தோற்றுவிட கூடாது இறுதிவரை..
தன்னம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்
இன்றைய தினம் கடினமாக இருக்கலாம்
நாளை மிக மோசமான தினமாக இருக்கலாம்
ஆனால், நாளைய மறுதினம் நிச்சயம் பிரகாசமாக இருக்கும்…
தன்னம்பிக்கை இருக்கும்
அளவுக்கு
முயற்சியும்
இருந்தால் தான் வெற்றி
சாத்தியம்…
எல்லோரிடமும் உதைபடும்
கால்பந்தாய் இருக்காதே
சுவரில் எறிந்தால்
திரும்பிவந்து முகத்தில்
அடிக்கும் கைபந்தாயிரு…
எண்ணங்களிலுள்ள தாழ்வு
மனப்பான்மையால் திறமைக்கு
தடை போடாதீர்கள்….
மாற்றம் உருவாக வேண்டுமென்றால் பல ஏமாற்றங்களை தாங்கிக்கொண்டு தான் ஆக வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள்.
கடைசி வரை நம்பிக்கை இழக்காதீர்கள். ஏனெனில் கடைசி வரியில் கூட உங்களுக்கான வெற்றி எழுதப்பட்டிருக்கலாம்.
வாழ்க்கையில் தடுமாறும்
நிலை வந்தாலும்
தன்னம்பிக்கையை இழக்காதே…
நமக்கான காலம் வரும்
துணிந்து செல்..!
நம்முடைய மிகப்பெரிய பெருமை விழாமல் இருப்பதில் இல்லை,
ஒவ்வொரு முறை விழும்போதும் எழுவதில் இருக்கின்றது.
உயர்ந்த நம்பிக்கைகள் சிறந்த மனிதர்களை உருவாக்குகின்றன.
நீங்கள் யார் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?
கேட்பதை விட்டுவிட்டு செயல்படுங்கள்;
செயல்பாடு ஒன்றே உங்களை வரையறுக்கும்.
துன்பம் இல்லாத இன்பமும்,
முயற்சி இல்லாத வெற்றியும்
எப்போதும் நிலைப்பதில்லை.
கடைசி வரை நம்பிக்கை இழக்காதீர்கள்.
ஏனெனில் கடைசி வரியில் கூட உங்களுக்கான வெற்றி எழுதப்பட்டிருக்கலாம்..