Tamilnadu Govt Job Vacancies 2023
Tamilnadu Govt Job Vacancies 2023 “ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 30,000 பணியிடங்களுக்கு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு நடத்த அரசாணை வெளியிட வேண்டும் என்றும் அரசுப்பணியாளர்கள் ஓய்வுபெறும் வயதை 58 ஆகக் குறைக்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
அரசுத்துறைகளில் மூன்றரை லட்சத்திற்கும் மேல் காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் குரூப்-4 தேர்வு மூலம் ஆண்டுதோறும் 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் வைத்துள்ளார்.
எனில், தேர்தலின் போது திமுக அளித்த இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்ற வாக்குறுதியை எப்போது நிறைவேற்றப்போகிறது? கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக அரசால் நிரப்பப்பட்ட காலி பணியிடங்களை விட, ஓய்வு பெறுவதினால் உருவான காலி பணியிடங்கள் மிக அதிகம். அரசுத் துறைகள் சிறப்பாகச் செயல்பட ஊழியர் பற்றாக்குறையைப் போக்கி காலி பணியிடங்களே இல்லை என்ற சூழலை திமுக அரசு எப்போது உருவாக்கப்போகிறது?
அதுமட்டுமன்றி, ஓய்வுபெறும் வயதை 60 ஆக அதிகரித்தும், காலிப் பணியிடங்களுக்கு நிரந்தரப் பணியாளர்களுக்கு மாற்றாக, தொகுப்பூதியத்தில் தற்காலிக பணியாளர்களை நியமித்தும் அவர்களின் உழைப்பினை உறிஞ்சுவது கொடுங்கோன்மையாகும். காலியாக உள்ள அரசுப்பணியிடங்களை நிரப்பாமல் அரசு இயந்திரத்தை முடக்கி மக்கள் சேவையினைத் தாமதப்படுத்துவோடு, அரசு வேலைக்காக அயராது முயற்சித்துக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தோடும் திமுக அரசு விளையாடுவது எதேச்சதிகாரத்தின் உச்சமாகும்.
ஆகவே, பல்வேறு அரசுத்துறைகளில் காலியாக உள்ள 3.5 இலட்சம் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்பவும், போட்டித்தேர்வுக்கு முயற்சிக்கும் இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் வாழ்வில் ஒளியேற்றவும் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 30,000 பணியிடங்களுக்கு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு நடத்த அரசாணை வெளியிட வேண்டுமெனவும், அரசுப்பணியாளர்கள் ஓய்வுபெறும் வயதை 58 ஆகக் குறைக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.
மேலும், தமிழ்நாடு அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் நிர்வாக அமைப்புகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மூலம் மட்டுமே நிரப்ப வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.