Thought of the day in tamil
வார்த்தைகளைவிட செயல்கள் அதிகம் பேசும்!
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளரும் தன்னம்பிக்கைப் பேச்சாளருமான டேல் கார்னகி, ஏழைக் குடும்பத்தில் பிறந்து மிகப்பெரிய உயரங்களைத் தொட்டவர்.
அவரது How to Win Friends and Influence People என்ற நூல் அதிக விற்பனையாகி சாதனை படைத்தது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மனிதர்களால் பின்பற்றப்பட்ட அவரது நம்பிக்கை மொழிகள் இங்கே…
வாழ்க்கையில் உங்களுக்கு போராடிக்கிறதா? ஒரு வேலையை நீங்கள் நம்பி, அதற்காக உங்கள் இதயத்தைத் தந்துவிடுங்கள். அதற்காக வாழுங்கள். அதற்காக உயிர்விடுங்கள். அப்போது நீங்கள் மகிழ்ச்சியை அறுவடை செய்வீர்கள்.
உங்களைத் தாக்கும் எதிரிகளைப் பற்றி கவலைப்படாதீர்கள். உங்களைப் புகழ்ந்துரைக்கும் நண்பர்களைப் பார்த்து பயப்படுங்கள்.
செயல்கள் வார்த்தைகளைவிட அதிகம் பேசுபவை.

உங்களால் விவாதத்தில் வெற்றிபெறமுடியாது. உங்களால் முடியாது ஏனெனில், நீங்கள் அதில் தோற்றால் வெல்லலாம். நீங்கள் வென்றால் தோற்கலாம்.
அங்கீகாரத்துக்கும் புகழ்ச்சிக்கும் என்ன வேறுபாடு? அது எளிதானது. ஒன்று நேர்மையானது. அடுத்தது நேர்மையற்றது. ஒன்று இதயத்தில் இருந்து வருகிறது. மற்றது வாயில் இருந்து வருகிறது. ஒன்று சுயநலமற்றது. மற்றது சுயநலமானது. ஒன்று பிரபஞ்சத்தால் விரும்பப்படுவது. மற்றது கண்டனத்திற்குரியது.
வெற்றிகரமான மனிதன் தன் தவறுகளில் இருந்து அனுபவம் பெறுகிறான்.மீண்டும் வேறு வழிகளில் முயற்சி செய்கிறான்.
ஒரு விவாதத்தில் சிறந்தவற்றைப் பெற அதை தவிர்ப்பதுதான் சிறந்த வழியாக இருக்கும்.
இன்று என்பது வாழ்க்கை. அந்த வாழ்க்கையே நிச்சயமானது. அந்த நாளை முழுமையாக பயன்படுத்துங்கள். எதிலாவது ஆர்வத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
எல்லா வாய்ப்புகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். முழு வாழ்க்கையும் ஒரு வாய்ப்புதான். ஒரு காரியத்தைச் செய்வதற்கான எண்ணமும் துணிச்சலும் கொண்டிருந்தால், அந்த மனிதன் நெடுதூரம் செல்வான்.
முதலில் கடினமான வேலைகளைச் செய்யுங்கள். எளிதான வேலைகள் அதுவே தங்களைப் பார்த்துக்கொள்ளும்.
முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்
Check our Latest Updates
- தமிழ்நாடு சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு 2250 காலிப் பணியிடங்கள் TN Helath Dept Recruitment 2023
- தமிழ்நாடு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு சம்பளம் ரூ.30,000 TN Social Welfare Recruitment 2023
- 10th,+2 பொதுத் தேர்வு தேதிகள் மாற்றம்? முக்கிய தகவல்கள் 10th 12th Public Exam Postpone details in tamilnadu
- சென்னை தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இளநிலை சுருக்கெழுத்தர் வேலைவாய்ப்பு ; 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் CLRI Junior Stenographer Recruitment 2023
- தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு 50,000+ காலிப் பணியிடங்கள் – முக்கிய தகவல்கள் TANGEDCO Recruitment 2023 Info