சத்துணவு திட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கிய உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் 8,997 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கான தகுதி மற்றும் தொகுப்பூதியம் ஆகிய விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் புதிதாக 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் தற்போது இத்திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

சமையல் உதவியாளர் பணிக்கு தகுதிகள்
- இத்திட்டத்தின் கீழ் 8,997 சமையல் உதவியாளர் பணிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- இப்பணிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.3,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு நியமனம் செய்யப்படும் பணியாளர்களின், 12 மாதங்கள் திருப்திகரமாக பணி முடிக்கும் தகுதியானவர்களுக்கு சிறப்பு காலமும் ஊதியம் வழங்கப்படும்.
- சிறப்பு கால முறை ஊதிய நிலை – 1 (ரூ.3,000 – ரூ.9,000) வழங்கப்படும். இதன் மூலம் அரசுக்கு ரூ.26.77 கோடி செலவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 மாதம் சிறப்பாக பணிகளை செய்யும் நபருக்கு சிறப்பு காலமுறை ஊதியமும் வழங்கப்படும். அரசு அறிவிப்பு மட்டுமே தற்போது வெளியாகியுள்ள நிலையில், விண்ணப்பிக்கும் முறை, பிற நடைமுறைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.