kudumba thalaivi urimai thogai rs 1000 Latest News
kudumba thalaivi urimai thogai rs 1000 Latest News தமிழகத்தில் மூன்று மாதங்களில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழக நிதிநிலை அறிக்கையில் ஆயிரம் ரூபாய் மகளிருக்கு வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் 15-ந் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
குறிப்பாக, நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம், சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர்,
ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியும் மகளிர் என பல்வேறு வகைகளில் தங்களது விலை மதிப்பில்லா உழைப்பை வழங்கி வரும் 1 கோடி பெண்கள் ‘மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தால் பயன் பெறுவார்கள் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து, உரிமைத் தொகை பெறுவதற்கான தகுதிவாய்ந்த பெண்கள் குறித்த வழிகாட்டுதலும் வெளியிடப்பட்டது. குறிப்பாக, நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம், சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியும் மகளிர் என பல்வேறு வகைகளில் தங்களது விலை மதிப்பில்லா உழைப்பை வழங்கி வரும் 1 கோடி பெண்கள் ‘மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தால் பயன்பெறுவார்கள் என தமிழக முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் முன்னேற்பாடுகள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
ரூ 1000 மகளிர் உரிமை தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்?
kudumba thalaivi urimai thogai rs 1000 Latest News PHH என்ற வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும்,35 கிலோ அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே ரூ 1000 உரிமைத் தொகை கிடைக்கும் என்கிறார்கள்.
புதுமைப்பெண் திட்டத்தில் பயன் அடையும் கல்லூரி பெண்களின் தாயர்களும் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும் என்கிறார்கள்.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற ரேஷன் அட்டையில் மாற்றம் எதுவும் செய்யத் தேவையில்லை என்றும் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் செலுத்தப்படும் என்றும்.
60 வயதிற்கு மேற்பட்டோர் வாங்கும் முதியோர் உதவி தொகையிலும் இந்த திட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி பல்வேறு விதமான தகவல்கள் குறிப்பாக சமூக வலைத்தளங்களிலும் அதி தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையில் இதுவரை அரசிடம் இருந்து.
இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது உண்மையான விஷயம்.
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Click here | |
Telegram | Click here |