magalir urimai thogai latest news
மகளிர் உரிமை தொகை இன்று முக்கிய அறிவிப்பு
magalir urimai thogai latest news திமுகவின் தேர்தல் அறிக்கையில் அதிக கவனம் பெற்ற வாக்குறுதி என்பது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று குறிப்பிட்டது தான். ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றதும் முதல் கையெழுத்து இந்த திட்டத்துக்கு தான் போடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மகளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவச பயணம் திட்டம் முதல் நாளே அமல்படுத்தப்பட்டது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
எதிர்பார்ப்பு ஒரு பக்கம் அதிகரிக்க, தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை உடனடியாக தொடங்குவதற்கான சூழலை ஏற்படுத்தாமல் இருந்தது. இந்த சூழலில் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முழுதாக நிறைவடைந்த நிலையில் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்படும் என்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடரில் இத் திட்டத்திற்காக 7000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார். தேர்தல் சமயத்தில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது தகுதி வாய்ந்த ஒரு கோடி பேருக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இன்று முக்கிய அறிவிப்பு
ஒரு கோடி பேருக்கு மாதம் 1000 ரூபாய் என்றால், மாதம் 1000 கோடி ரூபாய் அரசுக்கு செலவாகும். செப்டம்பர் முதல் மார்ச் வரை ஏழு மாதங்களுக்கு 7000 கோடி ரூபாய் என்ற கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்தவர்கள் யார், அந்த பட்டியல் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்ற கேள்வி அதிகமாக எழுப்பப்படுகிறது.
அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், சொந்த வீடு வைத்திருப்போர் உள்ளிட்டோருக்கு கிடையாது என்று ஒரு தகவல் உலா வருகிறது. அரசு ஊழியர் என்றால் லட்சக்கணிக்கில் சம்பளம் வாங்குபவர்களும் உண்டு, சில ஆயிரங்களை மட்டும் சம்பளமாக வாங்குபவர்களும் உண்டு. அதேபோல் சொந்த வீடு வைத்திருக்கும் அனைவரையும் ஒரே தட்டில் வைத்து பார்த்துவிட முடியாது.
அதிலும் வர்க்க இடைவெளி மிக அதிகம் இருக்கிறது. எனவே ஒரு கோடி பேரை தேர்வு செய்வது அரசுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும். தேவையற்ற விமர்சனங்களையும் ஏற்படுத்த வாய்ப்பு உண்டு என்கிறார்கள்.
ஐந்து பவுன் நகை கடன் தள்ளுபடி திட்டத்திலும் பலர் பயன்பெற முடியாமல் போனது. எனவே இந்த திட்டத்தில் பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், நிபந்தனைகளை குறைப்பதும் தான் இத்திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் விதமாக இருக்கும் என்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக தொடர்ந்து அமைச்சர்கள், அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த திட்டத்தை செயல்படுத்த சிறப்பு அதிகாரியாக இளம் பகவத் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த திட்டத்தை மாவட்ட வாரியாக எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.
இன்று (ஜூலை 6) மாலை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். அதைத் தொடர்ந்து விரைவில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Click here | |
Telegram | Click here |
Latest Government Jobs 2023 – Click here to apply.