Rs 1000 kudumba thalaivi urimai thogai updates
Rs 1000 kudumba thalaivi urimai thogai updates கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் பல்வேறு தேர்தல் அறிக்கைகள் அறிவிக்கப்பட்டது. அதில், மகளிருக்கு இலவச பேருந்து, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 போன்ற பல்வேறு அறிக்கைகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் எப்பொழுது அமல்படுத்தப்படும் என்று அனைவரும் எதிபார்த்த நிலையில், சமீபத்தில் நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் போது, நடப்பாண்டுக்கான பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தார்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
இதையடுத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பின்படி 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் மாதம் தாக்கல் செய்ய இருப்பதால், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 என்ற திட்டத்தில் ஏதேனும் நிபந்தனைகள் உள்ளதா? என்ற கேள்விக்கு மாநில திட்டக் குழுவின் துணைத்தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் பதிலளித்துள்ளார். அதன்படி, மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் கட்டாயமாக நிபந்தனைகள் இடம்பெறும் என்றும் அதில், வருமான வரி செலுத்தும் குடும்ப தலைவிகளுக்கு இந்த உரிமைத்தொகை வழங்கப்படாது என்றும் தெரிவித்தார்.
மேலும், இதுதொடர்பான முழு விவரங்கள் 2023-24 ஆம் ஆண்டுக்கான மார்ச் மாத பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று கூறினார்.
Rs 1000 kudumba thalaivi urimai thogai updates
யார் பெற தகுதி உடையவர்கள் என்பது பற்றி முழு விவரங்கள்:
1.வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள இல்லத்தரசிகளுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
2.அந்தியோதயா அன்னயோ ஜனா குடும்ப அட்டை வைத்துள்ள இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இதில் கணவரின் ஆண்டு வருமானம் கணக்கிட வாய்ப்பு இருக்கிறது.
3.அரசு ஊழியர்களாக உள்ள இல்லத்தரசிகளுக்கு உரிமைத் தொகை கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை.
4.புதுமைப் பெண் திட்டத்தில் பயன் பெறும் கல்லூரி மாண விகளில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள தாய்மார்கள் இதில் பயனடைய வாய்ப்பு இருக்கிறது.
5.60 வயதுக்கு மேற்பட்டோருக் கான முதியோர் உதவித்தொகை வழங்கு வதில் இந்தத் திட்டம் எந்த தாக்கத்தையும்ஏற்படுத்தாது.
6.இல்லத்தரசிகளுக்குதான் உரிமைத் தொகை என்பதால் குடும்ப அட்டையில் பெயர் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
7.தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் பணம் சென்றடையும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, இந்தத் திட்டம் எப்போது தொடங்கப்ப டும் என்கிற அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் முறையாக வெளியாக உள்ளது.
ஜூன் 3-இல் தொடக்கம்?-முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-இல் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் செய்திகள் வெளியாகி உள்ளன.