குடும்ப தலைவிக்கு 1000 யாருக்கு கிடைக்கும்? வெளியான முக்கிய தகவல் Kudumba thalaivi 1000 latest news

Kudumba thalaivi 1000 latest news

குடும்ப தலைவிக்கு 1000 யாருக்கு கிடைக்கும்?

Kudumba thalaivi 1000 latest news தமிழ்நாடு அரசு சார்பில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

இந்நிலையில் தான் ரூ.1000 உரிமைத்தொகை யாருக்கெல்லாம் வழங்கப்படாது என்பது தொடர்பான முக்கிய விபரம் வெளியாகி உள்ளது.

2021 சட்டசபை தேர்தலின்போது திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது. அப்போது ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இது பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

Kudumba thalaivi 1000 latest news
Kudumba thalaivi 1000 latest news

மேலும் சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். இதையடுத்து தேர்தல் வாக்குறுதிப்படி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து மகளிர் உரிமைத் தொகை அண்ணா பிறந்தநாளையொட்டி, செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. மேலும் குடும்ப தலைவிகளின் விபரங்களை சேகரிக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் இந்த திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று முக்கிய ஆலோசனை நடந்தது.

இந்த ஆலோசனையில் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, அனைத்து மாவட்ட கலெக்டர்களும் பங்கேற்றனர். இந்நிலையில் தான் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ரூ.1000 மகளிர் தொகை யாருக்கெல்லாம் வழங்கப்படாது என்பது பற்றி தகவல் கசிந்துள்ளது.

பயனாளருக்கான தகுதிகள்:

  • அதன்படி, ”மகளிர் உரிமைத்தொகையை பெற விரும்பும் பயனாளிகளுக்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும்.அதே நேரம், உச்ச வயது ஏதுமில்லை.
  • ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை வழங்க அரசு முடிவு.
  • சொந்தமாக கார் வைத்திருப்போர், ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக கொண்டிருப்போருக்கு ரூ.1000 உரிமைத்தொகை கிடையாது.
  • ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் வருவாய் பெறும் குடும்ப தலைவிகளுக்கு உரிமைதொகை கிடைக்காது.
  • 5 ஏக்கர் நிலம் வைத்து இருக்கும் குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகை இல்லை.
  • பெண் எம்.எல்.ஏ., எம்.பி. மற்றும் பெண் அரசு ஊழியர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படமாட்டாது.

எங்கு விண்ணப்பிக்கவேண்டும்?

எந்த ரேஷன்  கடையில் குடும்ப அட்டை உள்ளதோ, அந்த கடையில் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்படுகிறது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW

கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group
Click here

 

Latest Government Jobs 2023 – Click here to apply

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!