குடும்ப தலைவிக்கு மாதம் ரூ 1000 உரிமை தொகை எப்போது கிடைக்கும் முக்கிய அறிவிப்பு Rs 1000 for House Wives in tamilnadu

Rs 1000 for House Wives in Tamilnadu

Rs 1000 for House Wives in Tamilnadu குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி இந்த திட்டத்தை தொடங்க அரசு முடிவெடுத்துள்ளது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் எப்போது தொடங்கப்படும் அதைப் பெற தகுதி உடையவர்கள் யார் யார் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன. 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது, இல்லத்தரசிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று திமுக சார்பில் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டது. இது தேர்தல் நேரத்தில் மகளிர் மற்றும் வாக்காளர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW

WhatsApp Click here
Telegram Click here

Latest Government Jobs 2023 – Click here to apply

எதிர்க்கட்சிகள் விமர்சனம்: இதற்கிடையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தாதது குறித்து எதிர்க்கட்சிகள் அவ்வப்போது விமர்சித்து வருகின்றன. இது தொடர்பாக கணக்கெடுக்கும் பணிநடந்து வருவதாகவும், விரைவில் இந்த திட்டம் குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு வந்தது

பட்ஜெட்டில் அறிவிப்பு: இந்நிலையில், இந்த திட்டம்குறித்த கணக்கீடு முடிந்துள்ளதாகவும், இதுகுறித்து தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்பட்டது. இரு தினங்களுக்கு முன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘‘குடும்பத் தலைவிகளுக்கு மாதம்ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

Rs 1000 for House Wives in tamilnadu
Rs 1000 for House Wives in tamilnadu

யார் பெற தகுதி உடையவர்கள் என்பது பற்றி முழு விவரங்கள்:

1.வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள இல்லத்தரசிகளுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

2.அந்தியோதயா அன்னயோ ஜனா குடும்ப அட்டை வைத்துள்ள இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இதில் கணவரின் ஆண்டு வருமானம் கணக்கிட வாய்ப்பு இருக்கிறது.

3.அரசு ஊழியர்களாக உள்ள இல்லத்தரசிகளுக்கு உரிமைத் தொகை கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை.

4.புதுமைப் பெண் திட்டத்தில் பயன் பெறும் கல்லூரி மாண விகளில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள தாய்மார்கள் இதில் பயனடைய வாய்ப்பு இருக்கிறது.

5.60 வயதுக்கு மேற்பட்டோருக் கான முதியோர் உதவித்தொகை வழங்கு வதில் இந்தத் திட்டம் எந்த தாக்கத்தையும்ஏற்படுத்தாது.

6.இல்லத்தரசிகளுக்குதான் உரிமைத் தொகை என்பதால் குடும்ப அட்டையில் பெயர் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

7.தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் பணம் சென்றடையும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, இந்தத் திட்டம் எப்போது தொடங்கப்ப டும் என்கிற அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் முறையாக வெளியாக உள்ளது.

ஜூன் 3-இல் தொடக்கம்?-முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-இல் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் செய்திகள் வெளியாகி உள்ளன.

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!