Kudumba thalaivikku Rs 1000 Update
Kudumba thalaivikku Rs 1000 Update தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக சார்பில் பல்வேறு தேர்தல் அறிக்கைகள் அறிவிக்கப்பட்டது. அவற்றில், மகளிருக்கு இலவச பேருந்து, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 போன்ற பல்வேறு அறிக்கைகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் எப்பொழுது அமல்படுத்தப்படும் என்று அனைவரும் எதிபார்த்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதற்கான அதிகார்வபூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழக பட்ஜெட்டில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டு அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல், அதில் தகுதியுடைய பெண்களுக்கு மட்டுமே மாதம் ரூ.1000 என்ற வார்த்தையும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், தகுதியுடைய பெண்கள் என்றால் அது யாரை குறிக்கும் என்ற சந்தேகம் அனைத்து பெண்களிடமும் அதிகரித்தது.
மேலும் இதுகுறித்து வெளியான தகவலின்படி, வயதான பெண்கள், ஏற்கனவே அரசு உதவித்தொகை வாங்கும் பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்கள், விதவை பெண்கள் ஆகியோருக்கு அரசின் மாதம் ரூ.1000 வழங்கப்படாது என்றும் மிகவும் ஏழ்மை நிலையில் வாழும் குடும்பத்தலைவிகளுக்கு மட்டுமே மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாருக்கு உரிமை தொகை வழங்கப்படும் :
நிலையான மாத வருமானம் இல்லாமல் அன்றாட கூலி வேலை செய்யும் உழைக்கும் பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், கைம்பெண்கள், பி.எச்.எச் (PHH) , அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) ரேஷன் அட்டை வைத்திருக்கும் அட்டைத்தார்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பணிகளில் மகளிர் மேம்பாட்டுக் கழகம் ஈடுபட்டு தகுதியானவர்களை ஆய்வு செய்து வருகிறது. குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் வழங்குவதற்கான தகுதி நிபந்தனைகளை உருவாக்கி வரும் தமிழக அரசு, மாநிலத்தில் வருமான வரி தாக்கல் செய்பவர்கள் குறித்த தகவல்களை மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் (CBDT) கேட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 1.14 கோடி அந்தியோதயா அன்ன யோஜனா ரேசன் கார்டுகள் உள்ளன. தொடர்ந்து, முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்துள்ளவர்களின் விவரங்களும் ஒப்பீடு செய்யப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உரிமைத் தொகைப் பெற வாய்ப்பில்லாதவர்கள்:
மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகையை வருமான வரி செலுத்துபவர்கள் பெற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அதே போல், மத்திய, மாநில அரசுப் பணியில் உள்ள பெண்களுக்கும் உரிமைத் தொகை கிடைக்காது. மேலும், நான்கு சக்கர சொகுசு வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படாது.