TN EB E Bikes Charging Points
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் முக்கிய அறிவிப்பு
TN EB E Bikes Charging Points இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிவிட்டது. இதுபோன்ற எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை சார்ஜிங் ஸ்டேஷன் தான். எலெக்ட்ரிக் வாகனங்கள் பெட்ரோல் வாகனம் போல நம்பி நீண்ட தூரம் பயணிக்க முடியாது. பெட்ரோல் வாகனங்களில் ஆங்காங்கே பெட்ரோல் அடைத்துக்கொண்டு பயணிக்க முடியும். ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் போட இதுவரை இந்தியாவில் போதுமான சார்ஜிங் ஸ்டேஷன்கள் இல்லை.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகின்றன. இதன் காரணமாக மின்சார வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
அந்த வகையில், தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கும் பணியை மின்சார வாரியம் மேற்கொள்ள உள்ளது. இதற்காக மாநகராட்சி, நகராட்சிகளில் மின் வாரியம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் மின்சார சார்ஜிங் ஸ்டேஷன் அமைப்பதற்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், எலெக்ட்ரிக் வாகனங்களின் சார்ஜிங் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் மாநில அரசு செயல்பட்டு வந்த நிலையில், தமிழ்நாட்டில் 100 இடங்களில் இ-வாகனங்களுக்கு சார்ஜிங் பாய்ண்ட் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இனி வரும் காலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையை பொறுத்து சார்ஜிங் பாய்ண்ட் அமைக்கும் பணி மேலும் விரிவுப்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. மேலும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Click here | |
Telegram | Click here |