தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்பட இருந்தது. ஆனால் கோடை வெயில் தாக்கம் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் காணப்பட்டதால், ஜூன் 11ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டது.
இந்த விடுமுறைகளை ஈடுசெய்ய சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அண்மையில் தெரிவித்துள்ளார். இதனால் வாரத்திற்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் விடுமுறையா? என ஏங்கி வரும் மாணவர்களுக்கு பண்டிகை உள்ளிட்ட கொண்டாட்டங்களில் மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
பள்ளி செல்லும் மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே மிகுவும் மகிழ்ச்சி தான். தினமும் பள்ளிக்கு சென்று வீட்டு படங்களை தினமும் செய்து முடித்து, பாடங்களை தொடர்ச்சியாக கவனித்து வரும் மாணவர்களுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு வந்தால் பெரும் மகிழ்ச்சி தான்.
ஒரு நாள் விடுமுறை என்றாலும் மாணவர்கள் அதனை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்த ஆண்டு பள்ளிகள் தொடங்கும் தேதி கடும் வெயில் தாக்கம் காரணமாக இரண்டு முறை மாற்றி அமைக்கப்பட்டது.
மேலும் பள்ளிகள் திறப்பு இருமுறை தள்ளிவைக்கப்பட்டதால் சனிக்கிழமைகளிலும் இயங்குகிறது. இதனால் மாணவர்கள் மிகுவும் சோர்வுடன் காணப்படுகின்றனர்

ரமலானைப் போலவே, மொஹரம் பண்டிகையும் சந்திரன் பார்க்கும் தேதியைப் பொறுத்து கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த தினம் முஹர்ரம்-உல்-ஹரம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தப் பண்டிகை பிறை தெரிவதை வைத்தே கொண்டாடப்படுவதால் ஜூலை 29 ஆம் தேதி இஸ்லாமியர்களின் கணிப்பு படி அன்று தான் சந்திரன் தெரியவுள்ளது.
தமிழக அரசு ஜூலை 29ம் தேதி அன்று பொதுவிடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஜூலை 29ம் தேதி அன்று நடப்பு ஆண்டில் முஹர்ரம் பண்டிகை வர உள்ளது. இஸ்லாமியர்களின் புது வருடத்தின் முதல் மாதம் முஹர்ரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் மிகவும் சிறப்பாக இப்பண்டிகையை கொண்டாடுகின்றனர். ஆண்டுதோறும் தமிழக அரசு இப்பண்டிகைக்கு பொது விடுமுறை அளிப்பது வழக்கம்.
அதன்படி, 2023ம் ஆண்டு அரசு விடுமுறை நாட்கள் காலண்டர் முன்னதாக வெளியிடப்பட்டது. அதில், ஜூலை 29 முஹர்ரம் பண்டிகைக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அன்றைய தினம் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்பதால் மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.