விடுமுறை என்றால் அனைவருக்கும் மகிழ்ச்சி தான்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
பள்ளி செல்லும் மாணவர்களுக்கு விடுமுறை என்றதும் மிகுவும் ஆனந்தம் அடைவார்கள், தினமும் பள்ளி சென்று வரும் மாணவர்களுக்கு ஒரு நாள் விடுமுறை கூட அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
மாணவர்களுக்கு விடுமுறை எப்போது வரும் என்ற ஆவலில் உள்ளனர். ஏனெனில் தமிழகத்தில் இந்த ஆண்டு பள்ளிகள் தொடங்கும் தேதி கடும் வெயில் தாக்கம் காரணமாக இரண்டு முறை மாற்றி அமைக்கப்பட்டது.
மேலும் பள்ளிகள் திறப்பு இருமுறை தள்ளிவைக்கப்பட்டதால் சனிக்கிழமைகளிலும் இயங்குகிறது. இதனால் மாணவர்கள் மிகுவும் சோர்வுடன் காணப்படுகின்றனர்
இதனால் மாணவர்கள் எப்போது விடுமுறை கிடைக்கும் என எதிர்பார்த்து உள்ளனர். அவர்களுக்கு ஒரு நற்செய்தி.
தீரன் சின்னமலை
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி, ஈரோடு மாவட்டத்திற்கு, வரும் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு, வரும் 3-ம் தேதி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது.
மேலும், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, மாவட்ட கருவூலம் மற்றும் சார் நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இவ்விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வரும் 12-ம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக இருக்கும் என ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஆடிப் பெருக்கு
ஆடிப் பெருக்கு விழாவையொட்டி, வரும் 3-ம் தேதி தருமபுரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில், வரும் 2-ம் தேதி தொடங்கி 4-ம் தேதி வரை 3 நாட்களுக்கு அரசு சார்பில் ஆடிப்பெருக்கு விழா நடக்கவுள்ளது. இந்த விழாவையொட்டி 3-ம் தேதி (ஆடி-18) தருமபுரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் 26-ம் தேதி(சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.