தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் செப்.15 முதல் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி வேலைநாட்கள், தேர்வுகள், விடுமுறை உள்பட விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2018-ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது.
6 முதல் 10-ம் வகுப்புகளுக்கு செப்.19-ல் தொடங்கி 27-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் 6, 7, 8-ம் வகுப்புகளுக்கு காலை 10 முதல் மதியம் 2.30 மணி வரையும், 9, 10-ம் வகுப்புகளுக்கு மதியம் 2 முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வு நடைபெறும். 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான உடற்கல்வி தேர்வு செப்.22-ம் தேதி நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து செப்.28 முதல் அக்.2-ம் தேதி வரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாநில வாரியாக வினாத்தாள்கள்: இதற்கிடையே பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் மாநிலவாரியாக தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நடைமுறை 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த காலாண்டு தேர்வு முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு அட்டவணையில் கணிதம், வணிகவியல் போன்ற முக்கிய பாடங்களுக்குத் தயாராக போதிய காலஅவகாசம் இல்லை. எனவே, அந்த தேர்வுகளை ஒருநாள் தள்ளி செப்.23-ம் தேதி நடத்த வேண்டும் என மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.