TN Ration Shop Result 2023 Latest News தமிழகத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர், எடையாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு மாவட்ட வாரியாக நேர்காணல் முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 4 லட்சத்திற்கும் மேலானோருக்கு ஜனவரியில் ரிசல்ட் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
கூட்டுறவு துறை நடத்தும், 33,500 ரேஷன் கடைகளுக்கு, மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் வாயிலாக விற்பனையாளர், எடையாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
ஆட்கள் தேர்விற்கு அறிவிப்பாணை வெளியான, ஆறு மாதங்களுக்குள் விண்ணப்பம் பெற்று நேர்காணலை நடத்தி, நியமன பணியை முடித்து விட வேண்டும். இல்லையெனில், அந்த அறிவிப்பாணை செல்லாததாக மாறி விடும்.
TN Ration Shop Result 2023 Latest News
ஓராண்டிற்கு நீட்டித்து
ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 5,578 விற்பனையாளர், 925 எடையாளர் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்ய, மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள், 2022 அக்டோபரில் அறிவிப்பாணை வெளியிட்டன.
இதற்கு 4.16 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், நேர்காணல் முடிந்து மூன்று மாதங்களாகியும், இன்னும் தேர்வானவர் பட்டியல் வெளியிடவில்லை. இதற்கான அறிவிப்பாணை வெளியாகி, செல்லத்தக்க காலம் ஏப்ரலுடன் முடிந்து விட்டது.
இந்நிலையில், ரேஷன் ஊழியர் தேர்வுக்கான அறிவிப்பாணை செல்லத்தக்க காலத்தை ஓராண்டிற்கு நீட்டித்து, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை உத்தரவிட்டுள்ளது
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW