TN School Reopen 2023 Updated News
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது
TN School Reopen 2023 Updated News பள்ளி திறப்பு குறித்து மாற்றம் இருந்தால் முதல்வர் அறிவிப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். பெரும்பிடுகு முத்தரையர் 1348 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:-

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோடை வெப்பத்தின் கடுமை தணியும் வரை ஒரு வாரத்திற்கோ, 10 நாட்களுக்கோ அரசுப் பள்ளிகள் திறப்பை ஒத்தி வைப்பதால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. கல்வியைவிட மாணவர்களின் உடல்நலன் மிகவும் முதன்மையானது. இதைக் கருத்தில் கொண்டு, அரசுப் பள்ளிகள் திறப்பை குறைந்தது ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
“தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது எனவே பள்ளிகள் திறப்பதை மாற்றி அமைக்க வேண்டும். பள்ளிகளை ஜூன் ஒன்றாம் தேதியில் இருந்து 15 நாட்கள் கழித்து திறக்க வேண்டும்” என்றும் சீமான் வலியுறுத்தினார்
இதனையடுத்து, ஜூன் 7ம் தேதி ஒட்டுமொத்தமாக அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்ட அறிக்கையில், “முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், கோடை விடுமுறை என்பது மாணவர்களை ஆசுவாசப்படுத்த கூடிய காலம் என்றும், கோடை விடுமுறை காலத்திலும் மாணவர்களுக்கான பாடங்களை நடத்துவதை தனியார் பள்ளிகள் தவிர்க்க வேண்டும். இதை வேண்டுகோளாக முன்வைக்கின்றேன். ஆங்கில பயிற்சி, நீச்சல், விளையாட்டு போன்ற திறமைகளுக்கான காலமாக கோடை விடுமுறையை பயன்படுத்துங்கள் என்றும் கூறினார்.
பள்ளி வாகனங்கள்
தனியார் பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என பள்ளிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். முறையான சோதனைகளுக்குப் பிறகே பள்ளி பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்படும்.
திருச்சி ஜங்ஷன் பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள பெரும்பிடுகு முத்தரையர் மணி மண்டபத்தை திறந்து வைக்க பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வந்துள்ளது. இதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் மணி மண்டபத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். லேப்டாப் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், பள்ளி மாணவர்களுக்கு வழக்கம் போல சைக்கிள் லேப்டாப் வழங்கப்படும்.
பாட புத்தகங்கள்
பள்ளி திறப்பு அன்றே மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்படும். அதற்கு தேவையான பாட புத்தகங்கள் கையிருப்பில் உள்ளது. பழுதடைந்த கட்டிடங்களை புதுப்பிக்கும் திட்டத்தினை கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி வேலூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதில் 185 ஊராட்சிகளில் உள்ள தொடக்கப்பள்ளி கட்டிடங்கள் புதுப்பிக்கப்படும்.
உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி கட்டடங்கள் கட்டுவதற்கு நபார்டு வங்கி உதவி தேவைப்படுகிறது.நபார்டு வங்கி ஒட்டுமொத்த அமைச்சர்களின் துறைகளுக்கு நிதி உதவி வழங்குகிறது.அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறைக்கும் நிதி உதவி வழங்கப்படும். விரைவில் நிதியை பெற்று ஒரு மாத காலத்திற்குள் பள்ளிகள் புதுப்பிக்கும் பணி துவங்கும்” என்றார்.