TN Schools Leave News July 2023
TN Schools Leave News July 2023 பள்ளி செல்லும் மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே மிகுவும் மகிழ்ச்சி தான். தினமும் பள்ளிக்கு சென்று வீட்டு படங்களை தினமும் செய்து முடித்து, பாடங்களை தொடர்ச்சியாக கவனித்து வரும் மாணவர்களுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு வந்தால் பெரும் மகிழ்ச்சி தான்.
ஒரு நாள் விடுமுறை என்றாலும் மாணவர்கள் அதனை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்த ஆண்டு பள்ளிகள் தொடங்கும் தேதி கடும் வெயில் தாக்கம் காரணமாக இரண்டு முறை மாற்றி அமைக்கப்பட்டது.
பள்ளிகள் துவங்கிய உடன் அடுத்த வாரமே மழை காரணமாக இரண்டு நாட்கள் பள்ளிகளுக்கு பல்வேறு மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூன் 29 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டது.
மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு இயங்குகிறது.
இதனால் மாணவர்கள் எப்போது விடுமுறை கிடைக்கும் என எதிர்பார்த்து உள்ளனர். அவர்களுக்கு ஒரு நற்செய்தி.
இந்நிலையில் பள்ளிகளுக்கு தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை வரவுள்ளது அது எப்போது என்று முழுமையாக பார்க்கலாம்

TN Schools Leave News July 2023
நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் அனைத்து பண்டிகைகளின் போதும் அரசு ஊழியர், அலுவலகங்கள், பள்ளிகளுக்கு விடுமுறை வழங்குவது வழக்கம். அந்த வகையில் வரும் ஜூலை 29ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் மொஹரம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
இஸ்லாமியர்களின் இரண்டாவது புனித நாளாக மொஹரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை ஆகஸ்ட் 9 அன்று கொண்டாடப்பட உள்ளது.
பண்டிகை விடுமுறை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரமலானைப் போலவே, மொஹரம் பண்டிகையும் சந்திரன் பார்க்கும் தேதியைப் பொறுத்து கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த தினம் முஹர்ரம்-உல்-ஹரம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தப் பண்டிகை பிறை தெரிவதை வைத்தே கொண்டாடப்படுவதால் ஜூலை 29 ஆம் தேதி இஸ்லாமியர்களின் கணிப்பு படி அன்று தான் சந்திரன் தெரியவுள்ளது.
அந்த வகையில் ஜூலை 29ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தில் இந்த பண்டிகை அனைத்து இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்பட உள்ளது.இதனால் தெலுங்கானா அரசு அன்று அரசு அலுவலங்கங்கள், ஊழியர்கள், பள்ளிகளுக்கு பொது விடுமுறையை அறிவித்துள்ளது. மேலும் இந்த பண்டிகை அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடப்படுவதால் அன்று நாடு முழுவதும் பொது விடுமுறையாக கூட அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் வருகிற ஜூலை 29 ஆம் தேதி மொஹரம் பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஞாயிறு விடுமுறை வேற வர இருப்பதால் தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறையை எதிர்நோக்கி உள்ளனர்