TN Schools Rain Leave June 2023
TN Schools Rain Leave June 2023 தமிழகத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் செவ்வாய்கிழமையான நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
தமிழகத்தில் தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முதல் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு முழுவதும் மழை விடாமல் பெய்து வந்தது. இதனால், இன்று (19.6.223) திங்கட்கிழமை காலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது வரை மழை இடைவிடாமல் பெய்து வருவதால், செவ்வாய்கிழமையான நாளையும் (20.6.23) சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பள்ளி வளாகங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று 19.06.2023 விடுமுறை அளிக்கப்படுள்ள மாவட்டங்கள்
- சென்னை
- திருவள்ளூர்
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- ராணிப்பேட்டை
- வேலூர்
Click here to see Leave Information – 20.06.2023
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Click here | |
Telegram | Click here |