இந்தியாவில் நடப்பு ஆண்டு கோடை வெப்பம் வழக்கத்தை விட அதிக அளவில் இருந்தது. இத்தகைய சூழலில் மக்கள் வீட்டை விட்டு கூட வெளியே செல்ல முடியாத சூழலுக்கு ஆளாகினர். இந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகள் தாமதமாகவே திறக்கப்பட்டது. தற்போது வகுப்புக வழக்கம் போல நடைபெற்று வருகிறது. தற்போது மாதத்திற்கான விடுமுறை நாட்களை அறிந்து கொள்வோம்.
இந்த ஆண்டு பள்ளிகள் தொடங்கும் தேதி கடும் வெயில் தாக்கம் காரணமாக இரண்டு முறை மாற்றி அமைக்கப்பட்டது.
மேலும் பள்ளிகள் திறப்பு இருமுறை தள்ளிவைக்கப்பட்டதால் சனிக்கிழமைகளிலும் இயங்குகிறது. இதனால் மாணவர்கள் மிகுவும் சோர்வுடன் காணப்படுகின்றனர்
பள்ளி செல்லும் மாணவர்களுக்கு விடுமுறை என்றதும் மிகுவும் ஆனந்தம் அடைவார்கள், தினமும் பள்ளி சென்று வரும் மாணவர்களுக்கு ஒரு நாள் விடுமுறை கூட அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
இதனால் மாணவர்கள் எப்போது விடுமுறை கிடைக்கும் என எதிர்பார்த்து உள்ளனர்.
தமிழகத்தில் 3

நாட்கள் தொடர் விடுமுறை அறிவிப்பை பற்றி பார்க்கலாம்
பொது விடுமுறை:
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விடுமுறையில் பல்வேறு குழப்பங்கள் நீடித்த நிலையில் தற்போது அரசு விடுமுறை 18ம் தேதிக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் நடப்பு ஆண்டு விநாயகர் சதுர்த்தி விடுமுறையில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளது. தமிழக அரசு செப்டம்பர் 18 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறையாக அறிவித்துள்ளது. ஆனால் பஞ்சாங்கப்படி செப்டம்பர் 17 ஆம் தேதி தான் விநாயகர் சதுர்த்தி என பலரும் கூறினர். அதனால் செப்டம்பர் 17ஆம் தேதி விடுமுறை அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தது. இதனை கருத்தில் கொண்டு அனைவரும் சிறப்பாக பண்டிகையை கொண்டாடும் நோக்கில் செப். 17ஆம் தேதிக்கு விநாயகர் சதுர்த்தி மாற்றியமைக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது.
மற்றொரு தரப்பினர் எந்த வகையிலும் செப். 17ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட முடியாது. செப்.18ஆம் தேதியன்று தான் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் தேரோட்டம் நடைபெறும். அன்றைய தினம் தமிழக முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நடைபெறும் அதனால் 18 ஆம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என கூறப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி பொது விடுமுறை செப்.18ஆம் தேதிக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது.
3 நாட்கள் தொடர் விடுமுறை
விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது,செப்டம்பர் 16 மற்றும் 17 சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை எனவே தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை