TN Social Welfare Recruitment 2023
மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் அனைத்து வகையான வன்முறைகளுக்கு உள்ளான பெண்களுக்கு ஆதரவு தரும் ஒருங்கிணைந்த சேவை மையம் (One stop centre) செயல்பட்டு வருகிறது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
வன்முறையால் தனியார் மற்றும் பொது இடங்களில் குடும்ப, சமூகம் மற்றும் பணியிடத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள், வயது, சாதி, கல்வி, திருமணநிலை, இனம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் ஆதரவு இல்லாமல் பாலியல். உளவியல் மற்றும் பொருளாதார ரீதியான பிரச்சனைகளை எதிர் கொள்ளும் பெண்கள், பாலியல் துன்புறுத்தல், பாலியல் தாக்குதல் வன்முறை, போக்குவரத்தின் போது வன்முறை, ஆசிட் தாக்குதல் ஆகியவற்றிற்கு உட்பட்ட பெண்களுக்கு ஆதரவு தரும் (One Stop Centre) மையமாகவும் செயல்படும். 24 மணிநேரமும் (24X7) செயல்படும் இந்த உதவி மையத்திற்காக கீழ்கண்டவாறு தொகுப்பூதிய முறையில் பணியாளர் நியமனம் செய்யவுள்ளனர். எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
1 . மைய நிர்வாகி (Centre Administor)
பணியிட எண்ணிக்கை: 1
தொகுப்பூதியம் : ரூ.30,000/- முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய வேண்டும்;
வயது 35க்குள் இருக்க வேண்டும்;
சமூகப் பணியில் முதுகலை பட்டம் (Master’s Degree in Social Work / Psychology) பெற்றிருக்க வேண்டும் அல்லது சட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் குறைந்தபட்சம் 4 வருட அனுபவம் உடையவராகவும் இருத்தல் வேண்டும்;
2. முதுநிலை ஆலோசகர் (Senior Counsellor )
பணியிட எண்ணிக்கை: 1
தொகுப்பூதியம்: ரூ.20,000/- முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய வேண்டும்;
சமூகப் பணியில் முதுகலை பட்டம் (Master’s Degree in Social Work / Psychology) பெற்றிருக்க வேண்டும் அல்லது சட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் குறைந்தபட்சம் 2 வருட அனுபவம் உடையவராகவும் இருத்தல் வேண்டும்;
3.கணிணி நிர்வாகி (IT Administrator)
பணியிட எண்ணிக்கை: 1
தொகுப்பூதியம் : ரூ.18,000/- முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய வேண்டும்;
கணிணி அறிவியலில் பட்டப்படிப்பு இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்; 35 வயதிற்குள் இருக்க வேண்டும்; தொடர்புடைய துறைகளில் 3 வருடம் அனுபவம் இருத்தல் வேண்டும்.
4.வழக்கு பணியாளர்: ( Case Worker)
பணியிடகளின் எண்ணிக்கை : 6
தொகுப்பூதியம்: ரூ.15,000/- முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய வேண்டும்;
35 வயதிற்குள் இருக்க வேண்டும்; இளங்கலை சமூகப் பணியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 1 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்;
5. பல்நோக்குபணியாளர்கள் (Multipurpose Worker )
பணியிடங்களின் எண்ணிக்கை: 2;
தொகுப்பூதியம்: ரூ.6,500/- முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய வேண்டும்;
35வயதிகுள் இருக்க வேண்டும்; ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்
6.பாதுகாப்பாளர் (Security)
பணியிடங்கள் எண்ணிக்கை: 2
தொகுப்பூதியம்: ரூ.10,000/- முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய வேண்டும்;
35 வயதிற்குள் இருக்க வேண்டும்; அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றிய அனுபவம் மற்றும் உள்ளூரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை www.mayiladuthurai.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் அல்லது மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலகம், 3/264 குமரன் தெரு. சீனிவாசபுரம், மயிலாடுதுறை- 609 001 என்ற முகவரிக்கு 31.10.2023 அன்று கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாலை 5.45 மணிக்குள் 04364-212429, என்ற எண்களுக்கு தொடர்புக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.