TNHRCE Trichy Recruitment 2023 Details
TNHRCE Trichy Recruitment 2023 Details தமிழக அரசின் கீழ் இயங்கும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவானைக்காவல், அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Typist, Watchman, Cleaner, Electrician பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://palanimurugan.hrce.tn.gov.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி 11.05.2023 ஆகும்
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
Summary
TNHRCE Trichy Recruitment 2023 Details On behalf of the Department of Hindu Religious Charities under the Government of Tamil Nadu, an employment notification has been published in Arulmiku Jambukeswarar Akilandeswari Temple, Tiruvannaikaval, Tiruchirappalli District. Applications are invited for the posts of Typist, Watchman, Cleaner, Electrician. Candidates are requested to download the application form through official website https://palanimurugan.hrce.tn.gov.in/. Last date to apply is 11.05.2023
TNHRCE Trichy Recruitment 2023 Details
நிறுவனம் | அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் |
Vacancies | 07 |
தகுதி | 10th, 12th, I.T.I. |
சம்பளம் | மாதம் ரூ.15,900 முதல் ரூ.58,600 |
வயது வரம்பு | 18 முதல் 45 |
பணியிடம் | Trichy |
TNHRCE Trichy Recruitment 2023 Qualifications
காலிப்பணியிடங்கள்
1. தட்டச்சர் -1
2. உதவி மிண்பணியாளர் – 1
3. காவலர் – 4
4. பெருக்குபவர் – 1
கல்வித் தகுதி
1. தட்டச்சர்
1) பத்தாம் வகுப்பு தேர்ச்சி (அ) அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான
கல்வித்தகுதி மற்றும்
2) அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருத்தல்.
(i) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை (அல்லது)
(ii) தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (அல்லது)
(iii) ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழிலில்
இளநிலை
2. உதவி மிண்பணியாளர்
1. அரசால் அங்கீகரிக்கப்பட்ட மிண்பணியாளர் நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின் மின்
கம்பிப்பணியாளர் தொழிற்பயிற்சி (I.T.I) நிறுவனச்சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
2. மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து H- சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
3. காவலர்
தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
4. பெருக்குபவர்
தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
சம்பள விவரம் :
1. தட்டச்சர் – Rs. 18500-58600
2. உதவி மிண்பணியாளர் – Rs. 16600-52400
3. காவலர் – Rs. 15800-50400
4. பெருக்குபவர் – Rs. 15800-50400
வயது வரம்பு
அனைத்து பதவிகளுக்கும் – 18 முதல் 45 வயது வரை. மேலும் விபரங்களுக்கு அதிகாரபூர்வ தளத்தில் தெரிந்து கொள்ளலாம்
TNHRCE Trichy Recruitment 2023 எப்படி விண்ணப்பிப்பது?
- விண்ணப்பதாரர்கள் Offline பயன்முறையில் விண்ணப்பிக்கலாம்
- அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.
- எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.
- தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
- கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
- Address: உதவி ஆணையர்செயல் அலுவலர், அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருவானைக்காவல், திருவரங்கம் வட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 620005
முக்கிய தேதிகள்
விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 12.04.2023 |
விண்ணப்பத்தின் கடைசி தேதி | 11.05.2023 |
விண்ணப்படிவம்
அறிவிப்பாணை – Notification PDF | Click Here |
விண்ணப்படிவம் – Download PDF | Click Here |
TNHRCE Trichy Recruitment 2023 Important Instructions
முக்கிய நிபந்தனைகள்:
1.விண்ணப்பதாரர் 01.072023-ம் தேதி அன்று 18, வயது பூர்த்தியடைந்தவராகவும், 45 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2.இந்துமதத்தைச் சார்ந்தவராகவும் இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும். ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும். இவ்விளம்பரம் செய்யப்பட்ட தேதிக்கு பிறகு உரிய காலத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
3.விண்ணப்பத்துடன் கல்வித் தகுதிக்குரிய சான்றிதழ்கள் மற்றும் கூடுதல் கல்வித்தகுதிக்கான சான்றிதழ்கள் மற்றும் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்ற பிற ஆவணங்களுக்கு அரசிதழ் பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று அனுப்பப்பட வேண்டும்.
4.விண்ணப்பதாரர் வயதிற்கான சான்று ஆவணம் அல்லது கல்வி நிலையத்தால் வழங்கப்பட்டமாற்று சான்றிதழ் நகல் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்ப படிவத்தில் விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமலும் கேட்கப்பட்ட சான்று நகல்கள் இணைக்கப்படாமலும் பெறப்படும் விண்ணப்பங்கள் ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கப்படும்.
5.தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர் இத்திருக்கோயிலின் உபகோயில்களுக்கும், பணியிட மாறுதல் செய்யப்படுவார்.
6.பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர் பணியில் சர வரும் நேரத்தில் விண்ணப்பதாரர் வசிக்கும் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் விண்ணப்பதாரர் மீது குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்ற சான்றிதழ் மற்றும் உடல் தகுதி சான்றிதழ்களின் அசல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
7.விண்ணப்பங்களை அனுப்பும் போது மேல் உறையின் மீது பதவியின் பெயரை குறிப்பிட்டு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.
8.நேர்முக தேர்வில் கலந்து கொள்வதற்கு எவ்வித பயணப்படியும் வழங்கப்படமாட்டாது. விண்ணப்பதாரர் விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் கல்வி தகுதி மற்றும் பிற தகுதிக்குரிய ஆவணங்களின் அசல் சான்றிதழ்கள் நேர்முக தேர்வின் போது கண்டிப்பாக கொண்டு வரப்பட வேண்டும்.
9.விண்ணப்பதாரரால் தெரிவிக்கப்படும் விவரங்கள் அனைத்தும் சரியானவை என உறுதியளிக்க வேண்டும். தவறான தகவல்கள் அல்லது போலியான ஆவணங்கள் ஏதேனும் அளித்து பணி நியமன ஆணை பெறப்படும் பட்சத்தில் எவ்வித முன் அறிவிப்புமின்றி பணி நீக்கம் செய்தும், சட்ட ரீதியான குற்றவியல் நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்படுவர்.
10.நிர்ணயிக்கப்பட்ட காலகெடுவிற்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். மேலும், தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டுமே பரிசீலனைக்கு பின்னர் நேர்முக தேர்விற்கு அழைக்கப்படுவர்.
11.தகுதி இல்லாத விண்ணப்பங்களுக்கு திருக்கோயிலிருந்து எவ்வித தகவலும் அனுப்பப்படமாட்டாது. விண்ணப்பதாரர்களால் வழங்கப்படும் சான்றுகள் அனைத்தும் சம்மந்தப்பட்ட துறைகளின் மூலம் உண்மைத் தன்மை குறித்துபரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.
12.திருக்கோயிலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள் அவர்களின் வாரிசுதாரர்கள் அரசு பணி மற்றும் பொது நிறுவனங்கள், இதர திருக்கோயில்களில் பணிபுரிந்து தண்டனை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
13. உரிய முறையில் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ் நகல்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் காரணம் தெரிவிக்கப்படாமல் நிராகரிக்கப்படும்.
14. பணிநியமனம் அரசாணை எண்4 சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் (அநி.42) நாள். 03.092020 விதிகளுக்குட்பட்டது. அரசாணை எண். 219 சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் (அழநி.42) நாள். 02.092022 விதிகளுக்குட்பட்டது.
15. அரசாணை (நிலை) எண்74 சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் (அநி.42) துறை நாள். 03092020 விதி எண்.9-ன் படி முதுநிலை அல்லாத திருக்கோயில்களில் பணிபுரியும் தகுதியான பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம்.
16. தேர்வு முறையானது அடிப்படைக் கல்வித் தகுதி, அனுபவம், செயல்முறை தேர்வுகள் கூடுதல் தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும்.
Im +12 completed my qualifications any work available
yes sir available