TNPSC Current Affairs October 26 2021
Join TN Study Corner | |
Click here | |
Telegram | Click here |
Govt Jobs | Click here |
சென்னை துறைமுக தலைவராக சுனில் பாலிவால் பொறுப்பேற்பு
- சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவராக சுனில் பாலிவால் ஐஏஎஸ் சனிக்கிழமை பொறுப்பேற்றாா்.சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவராக இருந்து வந்த ரவீந்திரன் கடந்த செப். 29-ம் தேதி ரயில்வே துறைக்கு மாற்றப்பட்டாா். இதனையடுத்து எண்ணூா் காமராஜா் துறைமுக தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநராக இருந்து வந்த சுனில் பாலிவால் சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவா் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தாா். இந்நிலையில் சுனில் பாலிவால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவராக நியமிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து சனிக்கிழமை துறைமுக தலைவா் பொறுப்பை முறைப்படி ஏற்றுக் கொண்டாா்.
உத்தரகண்டில் இந்தியாவின் மிகப் பெரிய நறுமணத் தோட்டம்
- இந்தியாவின் மிகப்பெரிய நறுமணத் தோட்டம் உத்தரகண்ட் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. நைனிடால் மாவட்டம் லால்குவான் என்ற இடத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் 140 வகையான தாவரங்கள் அடங்கிய பிரமாண்ட நறுமணத் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மிகப் பெரிய நறுமணத் தோட்டம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.
‘விக்ராந்த்’ போா்க் கப்பல் 2-ஆம் கட்ட சோதனை தொடக்கம்
- உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள முதல் விமானந்தாங்கி போா்க் கப்பலான ‘ஐஏசி விக்ராந்த்’ கப்பலின் 2-ஆம் கட்ட சோதனை ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.இந்த போா்க் கப்பலானது, கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் ரூ.23,000 கோடி செலவில், 262 மீட்டா் நீளம், 62 மீட்டா் அகலம், 59 மீட்டா் உயரத்தில் 40,000 டன் எடையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, முதன் முதலாக கடந்த ஆகஸ்ட் மாதம் 5 நாள்கள் கடலில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
குலசேகரபட்டினத்தில் குறைந்த செலவில் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தலாம்
- துபாயில் மயில்சாமி அண்ணாதுரை,துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் விண்வெளி வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக அமீரக தமிழ் தொழில்முனைவோர் கூட்டமைப்பு (இடென்) சார்பில் இந்திய அரங்கில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானியும், தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத்தலைவருமான டாக்டர் மயில்சாமி அண்ணாதுரையை அமீரக தமிழ் தொழில்முனைவோர் கூட்டமைப்பு சார்பில், ஏ.எஸ்.பி.ஏ மேனேஜ்மென்ட் கன்சல்டன்சியின் தலைவர் ஆடிட்டர் பிரின்ஸ் என்கிற இளவரசன் வரவேற்று பூச்செண்டு கொடுத்து பொன்னாடை அணிவித்தார்.
இந்திய கடற்படையின் முதல் பயிற்சிப் பிரிவு இலங்கை பயணம்
- இந்திய கடற்படையில் முதல் பயிற்சிப் பிரிவில் உள்ள கப்பல்களான சுஜாதா, மகா், சா்துல், சுதா்ஷினி, தாரங்கினி மற்றும் கடலோர பாதுகாப்புப் படைக் கப்பல் விக்ரம் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை (அக். 24) முதல் 28-ஆம் தேதி வரை இலங்கைக்கு 4 நாள் பயணம் மேற்கொண்டுள்ளன.
- வெளிநாட்டில் கடற்படை அதிகாரிகளின் 100 மற்றும் 101-ஆவது ஒருங்கிணைந்த பயிற்சிக்காக இந்தக் கப்பல்கள் சென்றுள்ளன.
கிரெம்ளின் கோப்பை
- கிரெம்ளின் கோப்பை டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில் எஸ்டோனியா வீராங்கனை அனெட் கொண்டவெயிட் சாம்பியன் பட்டம் வென்றாா்.மாஸ்கோவில் சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ரஷியாவின் அலெக்ஸாண்ட்ரோவாவும்-கொண்டவெயிட்டும் மோதினா். இதில் முதல் செட்டை 6-4 என அலெக்சாண்ட்ரோவா கைப்பற்றினாா். இதன்பின்னா் சுதாரித்து ஆடிய கொண்டவெயிட் அடுத்த செட்டை 6-4 என கைப்பற்றினாா்.
- மூன்றாவது செட்டில் கடும் போராட்டத்துக்கு மத்தியில் 7-5 என கைப்பற்றி பட்டத்தையும் கைப்பற்றினாா் கொண்டவெயிட்.
சர்வதேச கலைஞர்கள் தினம்
- கலைஞர்களையும் அவர்களின் அனைத்து பங்களிப்புகளையும் கெளரவிக்கும் வகையில் சர்வதேச கலைஞர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஓவியர், சிற்பி, பீங்கான் கலைஞர், கவிஞர் மற்றும் நாடக ஆசிரியர் என பன்முகத் திறமை கொண்ட ஸ்பானிஷ் கலைஞரான பாப்லோ பிக்காசோவைக் நினைவு கூறும் வகையில் அவரது பிறந்தநாளான அக்டோபர் 25ல் இந்த தினம் கொண்டாடப்படுகிறது,
- கலைஞர்கள் சமூகத்திற்கு வழங்கிய பங்களிப்புகளை கொண்டாடும் வகையில் கனடாவைச் சேர்ந்த புகழ்பெற்ற கலைஞரான கிறிஸ் மேக்ளூர் 2004 ஆம் ஆண்டு சர்வதேச கலைஞர்கள் தினத்தைத் தொடங்கினார். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 25 ந்தேதி சர்வதேச கலைஞர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
- கலை, நீண்ட காலத்திற்கு முன்பே உருவானது. கலை, முக்கியமான நிகழ்வுகளின் பதிவுகளை வைத்திருக்கிறது. கலை, கடந்த காலத்துடனான தொடர்பை வழங்குகிறது. கலைஞர்கள் நம் வரலாற்றை, அவர்களின் படைப்புகள் மூலம் அழியாமல் பதிவு செய்கிறார்கள்.
- கலைஞர் என்ற வார்த்தை ஓவியர்கள், புகைப்படக்காரர்கள், சிற்பிகள், இசைக்கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள் என பலரை உள்ளடக்கியது. ஒருவன் படைப்பாற்றலுடன் பிறக்கும்போது, அந்த படைப்பாற்றல் கொண்டு ஒரு அழகான படைப்பை தன்னுடைய கடினமான உழைப்பின் மூலம் உருவாக்குகிறான். அந்த படைப்பு நம்மைச் சுற்றியுள்ள உலகத்திற்கு அழகு சேர்த்து நம்மையும் மெய்மறக்கச் செய்கின்றன.