TNSRLM Tenkasi Recruitment 2023 Lasat Date
TNSRLM Tenkasi Recruitment 2023 Laast Date தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள வட்டார இயக்க மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 02.06.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
ஊரக வளர்ச்சித் துறை
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (TamilNadu Rural Development and Panchayat Raj Department) தமிழ்நாடு அரசு 1994-இல் இயற்றிய பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி, தமிழக அரசின் கீழ் இயங்கும் ஒரு அரசுத் துறையாகும். இத்துறை மக்களுக்கான அடிப்படை வசதிகள், சேவைகளைத் தவிர வறுமை நிவாரணத் திட்டங்கள், வேலைவாய்ப்புத் திட்டங்கள், சுகாதாரம், அரசு ஊழியர்களின் திறன் மேம்படுத்தல், பெண்களின் சமூக, பொருளாதார மேம்பாடு, சுனாமியினால் பாதிப்படைந்தவர்களுக்குப் புனர்வாழ்வு போன்ற பல சமூக நலத்திட்டங்களில் மைய அரசு மற்றும் மாநில அரசின் நிதி மற்றும் பிற வெளிநாட்டு நிறுவனங்களின் (ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்) ஆதரவு பெற்ற உதவித் திட்டங்களைச் செயற்படுத்தும் பொறுப்பிலுள்ளத் துறையாகும். இவை தவிரப் பல்வேறு ஊராட்சி நிறுவனங்கள் தன்னாட்சி அரசுப் பிரிவுகளாகத் திறனுடன் செயற்படுவதற்காக இத்துறையிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்துறையின் கீழ் 12,524 கிராம ஊராட்சிகள் (பஞ்சாயத்துகள்), 385 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள் செயல்படுகிறது.

வட்டார இயக்க மேலாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 01.01.2023 அன்று 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான சான்றுகளுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, இரயில் நகர், மாவட்ட ஆட்சியரகம், தென்காசி – 627811.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.06.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s37cbbc409ec990f19c78c75bd1e06f215/uploads/2023/05/2023051945.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் (PDF) |
S