தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 812 ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்தப் பணிகளுக்கு செப்டம்பர் 18- ம் தேதி 1 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
கல்வித் தகுதி:
எட்டாம் வகுப்பு, 10 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
சம்பளம் : ரூ. 17,700 – 56,200

விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு www.arasubus.tn.gov.in – என்ற இணையதள முகவரி இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு, ஓட்டுநர் உடன் நடத்துநர் திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி- 18.09.2023
இந்த வேலைவாய்ப்பிற்கா கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவரங்கள் குறித்த அப்டேட்களை http://www.arasubus.tn.gov.in/ – என்ற இணையதள முகவரியில் காணலாம்.