Worm in Chicken Biryani at Ramanathapuram
சிக்கன் பிரியாணியில் புழு… அதிர்ச்சி கொடுத்த பிரபல ஹோட்டல்…!
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை
இந்தியாவில் சில காலமாக ட்ரெண்டிங்கில் இருந்து வரும் பிரதான உணவு பிரியாணி. கடந்தாண்டு கூட ஆன்லைனில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு பட்டியலில் முதலிடம் பிடித்தது பிரியாணி தான். அந்த அளவுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக் கூடிய உணவு வகைகளில் முக்கிய இடம் பிடித்துவிட்டது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
இதனை சாதகமாக பயன்படுத்தி நகர் முதல் கிராமம் வரை எங்கு திரும்பினாலும் பிரியாணி கடைகள் உள்ளன. அதோடு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு வகையான பிரியாணிகளும் விற்பனைக்கு வந்துவிட்டது.
ராமநாதபுரத்தில் பிரபல பிரியாணி கடை
அந்த வகையில், ராமநாதபுரத்தில் பிரபல பிரியாணி கடை ஒன்று உள்ளது. இந்த பிரியாணி கடையின் கிளை தமிழக முழுவதும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ராமநாதபுரத்தில் உள்ள பிரியாணி கடைக்கு கோவையை சேர்ந்த புகைப்பட கலைஞர்கள் இருவர் சாப்பிட சென்றனர். அவர்கள் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டு உள்ளனர்
அப்போது பரிமாறப்பட்ட பிரியாணியில் புழு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக உணவக மேலாளரிடம் கேட்டபோது, அலட்சியமாக பதில் அளித்ததால் இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர். அதன்பேரில் அங்கு சென்ற உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி உணவகத்தில் பிரியாணி மற்றும் சிக்கன், முட்டை உள்ளிட்டவர்களை ஆய்வு செய்தனர்.
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Click here | |
Telegram | Click here |