தமிழக பள்ளிகள் ஜூன் 15 ஆம் தேதி திறக்கப்படுமா..? TN Schools Reopen June 2023

TN Schools Reopen June 2023

TN Schools Reopen June 2023  தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மற்றும் முழு ஆண்டு தேர்வு நடந்து முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட விடுமுறை முடிவடையும் தருவாயில் உள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சில மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து தமிழகத்தில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதால், அன்பில் மகேஷ் முதல்வருடன் ஆலோசனை நடத்தி ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் இதற்கு மேலும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீடிக்கப்படுமா?? என்ற கேள்வி அதிகமாக எழுந்து வருகிறது.

வெயிலின் தாக்கம்

இந்தியா முழுவதும் இந்த ஆண்டு வழக்கத்தை விட கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறவே அச்சப்படுகின்றனர். கோடை வெயிலால் ஜூன் 1 ஆம் தேதி திறக்க இருந்த பள்ளிகள் ஜூன் 7 ஆம் தேதி திறக்கப்படும் என பல மாநிலங்களில் அறிவிப்பு வெளியாகியது. ஆனாலும் தற்போது வரை கோடை வெயில் குறைந்தபாடில்லை.
இதனால் மீண்டும் பள்ளிகள் திறப்பதை தள்ளிவைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
TN Schools Reopen June 2023
TN Schools Reopen June 2023

ஜூன் 15

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று ஜூன் 5ஆம் தேதி மேல்நிலைப் பள்ளிகளும், ஜூன் 7 ஆம் தேதி தொடக்கப் பள்ளிகளும் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. ஆனால் இந்த அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்தில் மற்றொரு அறிவிப்பை அந்த மாநில முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாகும் என வானிலை மையம் கணித்துள்ளது. இதனால் கோடை விடுமுறையை நீட்டிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி ஜூன் 7 தேதிகள் திறக்க இருந்த பள்ளிகள் ஜூன் 15 திறக்கப்படும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
தற்போது வெயிலின் தாக்கம் தமிழகத்திலும் குறையாமல் உள்ளது, மற்ற மாநிலங்கள் போல் தமிழகத்திலும் பள்ளிகள் ஜூன் 15 திறக்கப்படுமா..? என்ற கேள்வி பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது

1 thought on “தமிழக பள்ளிகள் ஜூன் 15 ஆம் தேதி திறக்கப்படுமா..? TN Schools Reopen June 2023”

  1. Please reopen July 15th because of climate.above 46yrs parents can’t able to maintain school transportation age is reason.and no immunity students also….

    Reply

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!