Black coffee benefits in tamil
Black coffee benefits in tamil பிளாக் காபி அதிகமான சுவையை தருவது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. இதில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. இது புற்றுநோய், இதய நோய், நீரிழிவு போன்ற பல்வேறு நோய்களைத் தடுக்கும் தன்மை கொண்டது. இதைத் தவிர, எடையை குறைக்கவும் உதவுகிறது.
பிளாக் காபி வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கொழுப்பை கட்டுப்படுத்த உதவுகிறது. எடை குறைக்க நினைப்பவர்களுக்கு சர்க்கரை, பால், கிரீம் போன்ற சேர்க்கைகள் இல்லாமல் கருப்பு காபியை பருக நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த காபியை அருந்துவதினால் இன்னும் பல நண்மைகள் கிடைக்கிறது. அதாவது பிளாக் காபி வளர்சிதை மாற்ற செயல்முறைகளை வேகப்படுத்தி, பசி எடுக்கும் தன்மையை கட்டுப்படுத்துகிறது. இது பெப்டைட் ஒய் எனப்படும் பசி ஹார்மோனிற்கு எதிராக செயல்பட்டு பசியை கட்டுப்படுத்துகிறது.
கருப்பு காபியில் இருக்கும் கஃபைன் உடல் ஆற்றலை ஊக்குவித்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. உடலில் இருக்கும் அதிக கலோரிகளை எரித்து உடலை சுறுசுறுப்பாக மாற்றுகிறது. அதுமட்டுமல்லாமல் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துகிறது.
இது கலோரி இல்லா பானம் என்றும் அழைக்கப்படுகிறது. கருப்பு காபி குளோரோஜெனிக் அமிலத்தைக் கொண்டுள்ளது. இது எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. உடலில் குளுக்கோஸ் உற்பத்தியைக் குறைக்கிறது.
தினமும் கருப்பு காபி குடிப்பது எடை குறைப்பிற்கு உதவும். உடற்பயிற்சிக்கு முன் கருப்பு காபியை குடிப்பது உடலில் இருக்கும் அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது
உடல் செயல்திறனை மேம்படுத்த உதவுகிறது
பிளாக் காபியில் உள்ள காஃபைன் நரம்பு மண்டலத்தை தூண்ட பயன்படுகிறது. இது இரத்தத்தில் அட்ரீனல் அளவை அதிகரிக்கிறது. இது உங்க உடல் உழைப்புக்கு தீவிரமான ஊக்கத்தை அளிக்கிறது.
நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது
நீங்கள் பிளாக் காபி குடித்து வருவது டயாபெட்டீஸ் அபாயத்தை எதிர்த்து போராட முடியும். இது உங்க உடலில் இன்சுலின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இரத்த குளுக்கோஸ் அளவை பராமரிக்க உதவுகிறது.
black coffee benefits in tamil
இதய நோய்களை விரட்ட உதவுகிறது
உடனடியாக இரத்த அழுத்தத்தை அதிகரிக்க காஃபைன் உதவுகிறது. ஆனால் சில நேரங்கள் கழித்து இரத்த அழுத்தம் நார்மல் நிலைக்கு வந்து விடும். நீங்கள் நீண்ட காலமாக பிளாக் காபி குடித்து வந்தால் இதய நோய் மற்றும் பக்கவாதம் அபாயத்தை விரட்ட முடியும். உடம்பில் உள்ள அழற்சியை குறைக்கிறது.
கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும்
கல்லீரல் உறுப்பு தான் நம் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இரத்தத்தில் காணப்படும் தீங்கு விளைவிக்கும் கல்லீரல் நொதிகள் மற்றும் நச்சுக்களை குறைக்க பிளாக் காபி உதவுகிறது. கல்லீரல் புற்றுநோய், கொழுப்பு கல்லீரல் நோய், ஹெபடைடிஸ் மற்றும் கல்லீரல் சிரோசிஸ் அபாயத்தைக் குறைக்க கருப்பு காபி உதவுகிறது என்று சில ஆய்வுகள் முடிவுகள் கூறுகின்றன.
நினைவாற்றலை அதிகரிக்கிறது
பிளாக் காபி குடிப்பது உங்க மூளையின் இயல்பான செயல்பாடுகளை எதிர்த்து உங்க மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது மூளை நரம்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. இது நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது.
Join our Daily Health tips WhatsApp Group and Telegram Channel
Click here | |
Telegram | Click here |