RTE Tamilnadu Admission 2023-24
RTE Tamilnadu Admission 2023-24 “குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் உள்ள இடங்களில் 25 சதவீத இடங்களில் ஏழை மாணவர்கள் 2013-14 ம் கல்வியாண்டு முதல் 2022-2023 கல்வியாண்டு வரை மாணவர்கள் சேர்க்கப்பட்டு பயன் பெற்றுள்ளனர். அதற்கான சிறப்பு சட்டத்தின் பெயரே RTE (Right To Education)”
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
நடப்பு கல்வியாண்டில் ஏழை வீட்டு பிள்ளைகளும் தனியார் பள்ளிகளில் உள்ள 25 சதவீத இட ஒதுக்கீட்டில் கல்வியை பெற March 20 முதல் April 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

RTE Tamilnadu Admission 2023-24 RTE விண்ணப்பிப்பது எப்படி?
1) RTE மூலமாகத் தமிழகத்தில் ஏழை மாணவர்களைத் தனியார் பள்ளிகளில் சேர்ர்க, பள்ளிக்கல்வித் துறையின் http://tnschools.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
2) மேலே குறிப்புட்டுள்ள இணைப்பு சென்று, சேவை பிரிவில் உள்ள RTE என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
3) அடுத்து http://rte.tnschools.gov.in/tamil-nadu என்ற பக்கத்திற்கு செல்வோம்.
4) இங்கு ‘Start Application’ என்பதை கிளிக் செய்து உடன் விண்ணப்ப பக்கம் வரும்.
5) விண்ணப்பத்தில் மாணவரின் விவரங்கள், பெற்றோர் விவரங்கள், முகவரி, பிறப்பு சான்றிதழ், முகவரி சான்றிதழ், போன்றவற்றை அளித்தபிறகு உங்கள் முகவரிக்கு அருகில் உள்ள தனியார் பள்ளிகளைத் தேர்வு செய்ய முடியும்.
6) பள்ளியைத் தேர்வு செய்து விண்ணப்பித்தபிறகு சமர்ப்பி என்பதை அழுத்தவும்.
7) பின்னர் உங்கள் கைபேசிக்கு ஒரு பதிவு எண்ணைப் பெறுவீர்கள், இது தான் குலுக்கலுக்கு முக்கியமானது. விண்ணப்பித்தவர்கள் குலுக்கல் முறையில் தான் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
RTE Tamilnadu Admission 2023-24 Eligibility
RTE மூலம் மாணவர்களைச் சேர்க்க தகுதி என்ன?
மாணவர்களின் பெற்றோருக்கு ஆண்டு வருமான 1 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது வருமான சான்றிதழ் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கும் இடம்:
வட்டார கல்வி அலுவலர் அலுவலகம்
விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டிய சான்றுகள்
1.குழந்தையின் ஆதார் அட்டை
2.குடும்ப அட்டை குழந்தையின் பெயருடன்
3.பிறப்பு சான்றிதழ்
4.ஜாதி சான்றிதழ்
5.பெற்றோர் ஆதார் அட்டை
6.பெற்றோர் வாக்காளர் அடையாள அட்டை
7.குழந்தையின் புகைப்படம் 2
முக்கிய குறிப்பு
சேர்க்கை விண்ணப்பங்களை உதவி தொடக்க கல்வி அலுவலர் அவர்கள் வழியாக இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்த படிவத்தின் நகல் ஒன்றை பள்ளியில் ஒப்படைத்தல் வேண்டும்.
விண்ணப்பித்தல் அனைத்தும் பெற்றோர்களின் பொறுப்பு
RTE Tamilnadu Admission 2023-24 Application Link
