SSC SI Recruitment 2023 Updates
SSC SI Recruitment 2023 Updates மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் டிகிரி படித்தவர்களுக்கான தகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் (Central Armed Police Forces) மற்றும் டெல்லி போலீஸில் (Delhi Police) 1876 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.08.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
காலியிடங்கள்:
பதவி | எண்ணிக்கை |
மத்திய ஆயுத காவல்படைகளில் உதவி ஆய்வாளர் | 1,714 |
டெல்லி காவல்துறை உதவி ஆய்வாளர் (ஆண்) | 109 |
டெல்லி காவல்துறை உதவி ஆய்வாளர் (மகளிர்) | 53 |
மொத்தம் | 1,876 |
முக்கியமான நாட்கள்:
ஆட்சேர்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்ட நாள் : 22.07.2023
இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கவேண்டிய கடைசி நாள் : 15.08.2023 (நள்ளிரவு 11 மணி வரை)
எழுத்துத் தேர்வு: எதிர்வரும் அக்டோபர் மாதம்
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளம்நிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். டெல்லி காவல்துறை உதவி ஆய்வாளர் (ஆண்) பதவிகளுக்கு ஓட்டுநர் உரிமை கட்டாயமாகும்.
வயது வரம்பு: 01.08.2023 அன்றுள்ளபடி, குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 01.08.2003 க்குப் பின்பு பிறந்தவர்களும், 01.01.2002-க்கு முன்பு பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் ஐந்து ஆண்டுகள் வரை வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும். இடஒதுக்கீடு சலுகை பெற தகுதியுடைய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் மூன்று ஆண்டுகள் வரை வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும், முன்னாள் இராணுவத்தினருக்கு, மத்திய அரசுப் பணியாளர்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பில் இருந்து அதிகபட்சமாக 3 ஆண்டிகள் வரை வயது வரம்பு சலுகை உண்டு.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து வகுப்பைச் சேர்ந்த பெண்கள் / பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர் கட்டணச் சலுகை பெற தகுதியுடைவர்கள்.
ஏனைய தேர்வர்கள் அனைவரும், இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது, ரூ.100 தேர்வுக் கட்டணத்தை கட்டாயாமாக செலுத்த வேண்டும். எஸ்பிஐ வங்கிக் கிளையின் மூலமாகவோ அல்லது ரூபே/விசா/ மாஸ்டர் வங்கிக் கணக்கு அட்டைகள், கடன் அட்டைகள், இணையவழி வங்கிப் பரிமாற்றம், யுபிஐ, ஆகியவை மூலமாகச் செலுத்தலாம்.
தெரிவு செய்யப்படும் முறை: முதல் தாள் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், உடல் தகுதி தேர்வு, மற்றும் மருத்துவ தகுதி தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும். இதில், தகுதி பெற்றவர்கள் இரண்டாம் தாள் எழுத்து தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். இதில், தேர்ச்சி பெற்றவர்கள் மருத்துவ சோதனைக்கு வரவழைக்கப்படுவர்.
விண்ணப்பம் செய்வது எப்படி?
விண்ணப்பங்கள் அனைத்தும் தேர்வாணையத்தின் வலைத்தளமான ssc.nic.in வாயிலாக ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆன்லைன் விண்ணப்பபடிவத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களது ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படும் மற்றும் கையெழுத்தை பதிவேற்றம் செய்யவேண்டும். புகைப்படங்கள், தொப்பி மற்றும் மூக்கு கண்ணாடி இல்லாமல் இருக்கவேண்டும். ஆள்சேர்ப்பு அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பை கிளிக் செய்யலாம்.
Notification & Application Link:
SSC Official Website Career Page | Click Here |
SSC Official Notification PDF | Click Here |
SSC Online Application Form | Click Here |