SSC CHSL recruitment 2023 : மத்திய அரசுத்துறைகளில் காலியாக உள்ள Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA), Data Entry Operator (DEO), Data Entry Operator, Grade ‘A’ உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்தவர்களுக்கான தகுதியில் எழுத்தர், உதவியாளர், தரவு உள்ளீட்டாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 08.06.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
SSC CHSL Recruitment 2023 Vacancies
- 1,600 காலிப் பணியிடங்கள்
நிரப்பப்படும் பதவிகளின் விவரம்
- Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA)
- Data Entry Operator (DEO)
- Data Entry Operator, Grade ‘A’

SSC CHSL Recruitment 2023 Qualifications
கல்வித் தகுதி :
இந்த Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA), Data Entry Operator (DEO), Data Entry Operator, Grade ‘A’ பதவிகளுக்கு பன்னிரெண்டாம் (12) வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுத் தகுதி :
01.08.2023 அன்று 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
சம்பள விவரம்
Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA): Pay Level-2 (Rs. 19,900-63,200)
Data Entry Operator (DEO): Pay Level-4 (Rs. 25,500-81,100) and Level-5 (Rs. 29,200-92,300)
Data Entry Operator, Grade ‘A’: Pay Level-4 (Rs. 25,500-81,100)
தேர்வு செய்யப்படும் முறை :
இந்த பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு (Computer Based Examination), எழுத்து தேர்வு (Descriptive Paper) மற்றும் திறனறி தேர்வு (Skill Test/ Typing Test) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கணினி வழி தேர்வு 200 மதிப்பெண்களுக்கு 1 மணி நேர கால அளவில் நடைபெறும். இந்த தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு, திறனறிதல், கணிதம் ஆகிய பகுதிகளில் இருந்து தலா 25 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும். ஓவ்வொரு கேள்விக்கும் தலா 2 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான விடைக்கு 0.5 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.
எழுத்துத்தேர்வானது, 100 மதிப்பெண்களுக்கு 1 மணி நேர கால அளவில் நடைபெறும். இந்த தேர்வு கட்டுரை எழுதுதல், கடிதம் எழுதுதல், விரிவான விடையளித்தல் போன்ற வகைகளில் அமையும்.
திறனறி தேர்வானது தகுதித் தேர்வாகும். இதில் தட்டச்சு உள்ளிட்ட திறன்கள் சோதிக்கப்படும்.
Exam Center In Tamilnadu: Chennai, Coimbatore, Krishnagiri, Madurai, Salem, Tiruchirappalli, Tirunelveli & Vellore
SSC CHSL Recruitment 2023 விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில் Notices | Staff Selection Commission | GoI (ssc.nic.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- home page- ல் Apply என்பதை கிளிக் செய்யவும்.
- SSC GD Constable Recruitment, Apply என்பதை கிளிக் செய்யவும்
- முதல் முறை விண்ணப்பம் செய்வோர் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின் பயனாளர் ஐடி உருவாக்க்கப்படும்
- ஐடி உருவாகியதையடுத்து, லாக் இன் செய்து அப்ளை செய்யவும்
- புதிதாக உள்ள விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ளவைகளுக்கு சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
விண்ணப்பக் கட்டணம் :
ரூ. 100, இருப்பினும் SC/ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
08.06.2023
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் (Online) | Click here |
