Tamilnadu Diwali holiday 2022
Tamilnadu Diwali holiday 2022 தீபாவளி பண்டிகை 24ஆம் தேதி கொண்டாடப்படஉள்ள நிலையில் தீபாவளிக்கு மறுநாளான செவ்வாய்கிழமை விடுமுறை விடப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவ, மாணவிகளிடத்திலும், பெற்றோர்களிடத்திலும் எழுந்தது. அதே சமயம் பாண்டிச்சேரியில் தீபாவளிக்கு மறுநாள் 25 ம்தேதி விடுமுறை அளிக்கப்பட்டது தமிழகத்திலும் அது போல் விடுமுறை விடப்படுமா என எல்லோரும் எதிர்பார்த்து இருந்தார்கள்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
இந்நிலையில் திருச்சியில் இருந்து சென்னை செல்வதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விமான நிலையம் வந்தபோது செய்தியாளர்கள் அவரிடம் தீபாவளி பண்டிகைக்கு அடுத்தநாளான செவ்வாய் கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தீபாவளிக்கு மறுநாள் செவ்வாய் கிழமையும் சேர்த்து விடுமுறை அளிப்பது குறித்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். இந்த விடுமுறையானது பள்ளி கல்வித் துறைக்கு மட்டுமின்றி தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளுக்கும் பொருந்தும். செவ்வாய் கிழமை விடுமுறை குறித்து முதல்வரிடம் கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் கலந்து ஆலோசித்து முடிவு அறிவிப்பார் எனகூறினார்
இந்நிலையில் இவ்வாண்டு தீபாவளி பண்டிகை 24.10.2022 அன்று கொண்டாடும் பொருட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏதுவாக 25.10.2022 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 19.11.2022 அன்று பணி நாளாக அனுசரிக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
Government Order

இந்திய அணுசக்தி துறையில் வேலைவாய்ப்பு சம்பளம் ரூ.81,100 – Click here to apply
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
Click here | |
Telegram | Click here |