Tamilnadu government free coaching for TNPSC 2023
Tamilnadu government free coaching for TNPSC 2023 தமிழ்நாடு அரசின் தலைமைப் பயிற்சி நிறுவனமாக சென்னையிலுள்ள அண்ணா மேலாண்மை நிலையம் இயங்கி வருகிறது. அண்ணா மேலாண்மை நிலையம், அ, ஆ பிரிவினருக்கான அடிப்படைப் பயிற்சி நிலையம், அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி நிலையம், பவானிசாகரில் அமைந்துள்ள குடிமைப் பணியாளர்கள் பயிற்சி நிலையம் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுடைய பயிற்சிகளை நிறைவேற்றி வருகின்றன.
அண்ணா மேலாண்மை நிலையத்தில் இளநிலை உதவியாளர்கள் முதல் இந்திய ஆட்சிப் பணியாளர்கள் வரை அனைவருக்குமான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
அவ்வப்போது துறை அலுவலர்களுக்கு அலுவலக நடைமுறை, தகவல் பெறும் உரிமைச் சட்டம், ஒழுங்கு நடவடிக்கை விதிகள், மன அழுத்த மேலாண்மை, குழு மேலாண்மை, ஓய்வுக்கு முந்தைய ஆலோசனை, நேர மேலாண்மை, பேரிடர் மேலாண்மை, தலைமைப் பண்புகள் போன்ற பல தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. (Tamilnadu government free coaching for TNPSC 2023)

Tamilnadu government free coaching for TNPSC 2023
போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு இலவச பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இது குறித்து அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியின் இயக்குனரும் தலைமை செயலாளருமான வெ.இறையன்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெரும் விதமாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரயில்வே தேர்வு வாரியம் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போன்ற போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு கட்டணம் இல்லா பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்ள விரும்பும் தேர்வர்கள் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். அதேபோல் போட்டி தேர்வு பயிற்சி மையங்களில் உணவு, தங்கும் வசதிகள் இல்லை. மேலும் ஆறு மாத காலம் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்புகள் வருடாந்திர வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் www.civilservicecoaching.com என்ற இணையதளம் மூலமாக புதன்கிழமை மார்ச் 31-ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள 73 73 53 29 99, 98 94 54 1118, 86 67 27 66 84, 84 89 33 44 19 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.
31.03.2023
