TN 10th Original Mark sheet
TN 10th Original Mark sheet: கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்த முடியாமல் போனது. தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால், இந்தாண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டன. குறிப்பாக 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
இதில், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி தேர்வு முடிவடைந்தது. இதே போல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6 ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி வரை நடைபெற்றது. அதேநேரம் 11ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மே 9ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதனிடையே 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணி ஜூன் 1 ஆம் தேதி தொடங்கியது. இந்த விடைத்தாள்கள் முடிக்கும் பணி ஜூன் 9 ஆம் தேதி நிறைவடைந்தது
10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் ஆசிரியர்கள் கடுமை காட்டக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியது. மாணவர்கள் ஓரளவு விடை அளித்து இருந்தால் முழு மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. தாராளமாக மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளதால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் தேர்ச்சி விகிதம் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
10 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் 20 ஆம் தேதி அன்று வெளியானது. அதன் பின்னர் 10 ஆம் வகுப்பு provisional marksheet தரவிறக்கம் செய்து +1 மற்றும் டிப்ளமோ பாடப்பிரிவுகளில் சேரலாம் என அரசு அறிவித்தது. மாணவர்களுக்கு எப்போது அசல் மதிப்பெண் சான்றிதிழ் கிடைக்கும் என எதிர்ப்பார்த்து இருந்தனர்.
இந்நிலையில் அரசு தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியுட்டுள்ள அறிவிப்பில் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதிழ் வரும் 13.10.2022 அல்லது அதற்கு அதன் பின்னர் தாங்கள் படித்த பள்ளிகளில் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Click here | |
Telegram | Click here |