தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை
பள்ளி செல்லும் மாணவர்களுக்கு விடுமுறை என்றதும் மிகுவும் ஆனந்தம் அடைவார்கள், தினமும் பள்ளி சென்று வரும் மாணவர்களுக்கு ஒரு நாள் விடுமுறை கூட அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
இதனால் மாணவர்கள் எப்போது விடுமுறை கிடைக்கும் என எதிர்பார்த்து உள்ளனர். தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிப்பை பற்றி பார்க்கலாம்
தமிழகத்தில் இந்த ஆண்டு சுதந்திர தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் 2வது சனிக்கிழமை, ஞாயிறு மற்றும் திங்கள் என மொத்தமாக நான்கு நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேலும், பெரும்பாலான தனியார் துறை நிறுவனங்களிலும் திங்கட்கிழமை விடுமுறை எடுத்தால் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுப்பு கிடைக்கும்.
பொதுவாக ஏதேனும் பண்டிகை நாட்களில் மக்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக போக்குவரத்து அரசு கூடுதலாக பேருந்துகளை இயக்குவது வழக்கம். அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதனால், விடுமுறையொட்டி சொந்த ஊருக்கு திரும்பும் பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 1100 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. பொதுவாகவே விடுமுறை காலங்களில் தனியார் ஆம்னி பேருந்துகளில் இரட்டிப்பு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வரும் நிலையில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பயணிகள் தெரிவித்துள்ளனர்.
அதாவது, சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்வதற்காக 500 சிறப்பு பேருந்துகளும், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து பிற ஊர்களுக்கு செல்வதற்காக 400 சிறப்பு பேருந்துகளும், ஆகஸ்ட் 12ஆம் தேதி 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கத் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்திருக்கிறது. எனவே, கூட்ட நெரிசலை தடுப்பதற்காக தற்போதையிலிருந்து முன்பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.