தமிழகத்தில் தொடர் விடுமுறை – வெளியான முக்கிய அறிவிப்பு TN August Leave Details

நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை மகிழ்விக்கும் வகையில் விடுமுறை அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

விடுமுறை அறிவிப்புகள்

தமிழக அரசு நடப்பு கல்வி ஆண்டின் தொடக்கத்தில் அதிக பட்ச வெப்பநிலை காரணமாக பள்ளிகளை இரண்டு வாரங்கள் தாமதமாக தான் திறந்தது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் 2வது சனிக்கிழமையான இன்று மற்றும் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.

இதனை தொடர்ந்து, திங்கட்கிழமை வேலை நாள், அன்று ஒரு நாள் மட்டும் அனைத்து கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படும். அதன்பிறகு, ஆகஸ்ட் 15ம் தேதியான செவ்வாய்க்கிழமை அன்றும் விடுமுறை தினமாகும். இதனால், அடுத்து வரும் 3 நாட்களில் 2 விடுமுறை வருகிறது என, மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

TN August Leave Details
TN August Leave Details

சிறப்பு அறிவிப்பு

பொதுவாக ஏதேனும் பண்டிகை நாட்களில் மக்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக போக்குவரத்து அரசு கூடுதலாக பேருந்துகளை இயக்குவது வழக்கம். அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதனால், விடுமுறையொட்டி சொந்த ஊருக்கு திரும்பும் பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 1100 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. பொதுவாகவே விடுமுறை காலங்களில் தனியார் ஆம்னி பேருந்துகளில் இரட்டிப்பு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வரும் நிலையில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பயணிகள் தெரிவித்துள்ளனர்.

அதாவது, சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்வதற்காக 500 சிறப்பு பேருந்துகளும், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து பிற ஊர்களுக்கு செல்வதற்காக 400 சிறப்பு பேருந்துகளும், ஆகஸ்ட் 12ஆம் தேதி 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கத் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்திருக்கிறது. எனவே, கூட்ட நெரிசலை தடுப்பதற்காக தற்போதையிலிருந்து முன்பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!