TN School Reopen 2023 Confirmed
பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைக்கப்படுமா?
வெயிலின் தாக்கம்

கோடை வெயில்:
ஆனால் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில்தான் தமிழ்நாட்டில் வெயில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எதிர்பார்க்காத அளவிற்கு வெயில் உச்சம் அடைந்து உள்ளது. தினசரி வெப்பநிலை முதல்நாளை விட அதிகமாக உள்ளது.
சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில்
சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில் உண்மையான கோடை காலம் கடந்த இரண்டு நாட்களாகத்தான் சென்னையில் நிலவி வருகிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் அதிகாரிகளுடன் இன்று காலை ஆலோசனை நடத்தினார். அதனால் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளி போக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், “ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 6ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்” என்று அதிரடியாக அறிவித்தார். இதனால் மாணவர்களின் கோடை விடுமுறை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படுமா?
ஜூன் 12 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது, அதே நேரம் அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் குறைந்து வெயிலின் தாக்கமும் குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே பள்ளிகள் திறப்பு திட்டமிட்டப்படி 6ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Click here | |
Telegram | Click here |
