TN school reopen date 2023
TN school reopen date 2023 கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
அரசுக்கு கோரிக்கை வைக்கும் தலைவர்கள்
கோடை வெப்பத்தின் கடுமை தணியும் வரை ஒரு வாரத்திற்கோ, 10 நாட்களுக்கோ அரசுப் பள்ளிகள் திறப்பை ஒத்தி வைப்பதால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. கல்வியைவிட மாணவர்களின் உடல்நலன் மிகவும் முதன்மையானது. இதைக் கருத்தில் கொண்டு, அரசுப் பள்ளிகள் திறப்பை குறைந்தது ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

TN school reopen date 2023
“தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது எனவே பள்ளிகள் திறப்பதை மாற்றி அமைக்க வேண்டும். பள்ளிகளை ஜூன் ஒன்றாம் தேதியில் இருந்து 15 நாட்கள் கழித்து திறக்க வேண்டும்” என்றும் சீமான் வலியுறுத்தினார்
இதனையடுத்து, ஜூன் 7ம் தேதி ஒட்டுமொத்தமாக அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்ட அறிக்கையில், “முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், கோடை விடுமுறை என்பது மாணவர்களை ஆசுவாசப்படுத்த கூடிய காலம் என்றும், கோடை விடுமுறை காலத்திலும் மாணவர்களுக்கான பாடங்களை நடத்துவதை தனியார் பள்ளிகள் தவிர்க்க வேண்டும். இதை வேண்டுகோளாக முன்வைக்கின்றேன். ஆங்கில பயிற்சி, நீச்சல், விளையாட்டு போன்ற திறமைகளுக்கான காலமாக கோடை விடுமுறையை பயன்படுத்துங்கள் என்றும் கூறினார்.
10th,12th படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள்- Click here
Check TN Schols Official Website Link – Click here

Ieave udujga