TN Schools Early Reopen 2023
TN Schools Early Reopen 2023 சென்னை, தமிழகத்தில் வரும் 7-ம் தேதிக்கு முன்பாக மெட்ரிகுலேஷன் பள்ளிகளை திறக்க கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு, 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஜூன் 1-ம் தேதியும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புவரை ஜூன் 5-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து, கோடை விடுமுறைக்குப் பிறகு அனைத்து பள்ளிகளும் ஜூன் 7-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்து இருந்தார்.
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் ஜூன் 7ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்தார். இந்த உத்தரவை மீறி சென்னையில் உள்ள ராமாபுரத்தில் தனியார் பள்ளி ஒன்று இன்று திறக்கப்பட்டது. இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் உத்தரவை மீறும் பள்ளிகளுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் “கோடை வெயில் அதிகமாக இருக்கும் காரணத்தால் பள்ளிகள் திறக்கும் தேதியை ஜூன் 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி பள்ளிகளை முன்கூட்டியே திறக்கக் கூடாது.
கோடை வெயில் அதிகமாக இருப்பதையொட்டி பள்ளிகள் திறக்கும் தேதியை வரும் 7-ம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறோம். முன்கூட்டியே பள்ளிகளை திறக்கக் கூடாது. அதை மீறி தனியார் பள்ளிகள் திறந்திருந்தால் அந்த பள்ளிகளின் மீது அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
சி.பி.எஸ்.இ. பள்ளிக் கூடங்கள் அதுவும் 10-ம் வகுப்புக்கு மேல் திறந்திருக்கலாம். தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிக் கூடங்கள் திறந்திருந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது சம்பந்தமாக அதிகாரிகளுக்கு தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்வித் துறை அதிகாரிகள் மாவட்ட வாரியாக இது பற்றி விசாரித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
Cbse school 1st std to 12 std compulsory open pannitanga. Cbsela padikkum studentsum tamilnadula thaana irukkanga avangaluku mattum veyil adikkadhaa