TN TRB 15000 Vacancies
TN TRB 15000 Vacancies தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித்தேர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அரசு பள்ளி, கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
பணி நியமனம்:
தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விரைவில் பணி நியமனம் செய்யப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில், தற்போது வரை அரசு பள்ளி, கல்லூரி, கல்வியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் எதுவும் நிர்ப்பம் செய்யப்படாமல் உள்ளது.
போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்புகள் பல முறை வெளியிடப்பட்டு, தொடர்ந்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி
அதன்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரியிலும் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு 4,000 பணியிடங்களும், வட்டார கல்வி அலுவலர் பணியில் 23 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு 155 விரிவுரையாளர்கள், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 1,874, இடைநிலை ஆசிரியர் பணிக்கு 3,987 மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் உள்ள காலியிடங்களையும் சேர்த்து மொத்தம் 15,000 காலிப்பணியிடங்களும் உள்ளன. இதனால், ஊழியர்கள் நியமனம் விரைந்து நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.