தமிழ்நாடு கிராம உதவியாளர் வேலை வாய்ப்பு – முக்கிய தகவல்கள் TN Village Assistant Jobs 2023 Info

கிராம உதவியாளர் பணி என்றால் என்ன?

தமிழ்நாட்டின் வருவாய்க் கிராமங்களின் அதிகாரியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கீழாக கிராம உதவியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். வரி வசூலித்தல், கிராம கணக்குகளை நிர்வகித்தல், நில வருவாய் ஆவணங்களைத் தயாரித்தல், கணக்குகளை முறையாக சரியாக வைத்து கொள்ளுதல், பிறப்பு, இறப்பு போன்ற பல்வேறு பதிவேடுகளை தயாரித்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

Village Assistant Job 2022 Highlights

Name of the Organisation Tamilnadu Revenue Department
பணியின் பெயர் கிராம உதவியாளர்
காலிப் பணியடங்கள் விரைவில் அறிவிக்கப்படும்
சம்பளம் Rs 11,100 – 35,100
பணியிடம் தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ இணையதளம் www.tn.gov.in
 
TN Village Assistant Jobs 2023 Info
TN Village Assistant Jobs 2023 Info

கல்வி தகுதி:

  • விண்ணப்பிக்கும் நபர்கள் 05-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
  • தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வாசிக்கும் மற்றும் எழுதுதல் திறன் மதிப்பிடப்படும்

வயது தகுதி:

விண்ணப்பதாரர்களின் வயது 21 வயது முதல் 34 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கிராம உதவியாளர் பணியிடங்களில் இடஒதுக்கீடு? 

ஆம்!!! தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீடு விதிகள் பின்பற்றப்படும். பெண்களுக்கான 30% இடங்கள் உட்பட. கிராம உதவியாளர் பதவிக்கான அடிப்படைத் தகுதிகள்  என்ன? 
  • குறைந்தபட்சம் 5ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
  • அறிவிக்கப்பட்ட பதவிக்கான வட்ட எல்லைக்குள் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்
  • வண்டி ஓட்டும் திறன் இருக்க வேண்டும்
  • இருதாரமணம் இருக்கக் கூடாது
பி.இ/பி.டெக் மாணவர்கள் விண்ணப்பிக்கலாமா? குறைந்தபட்சம் 5ம் வகுப்புத் தேர்ச்சி என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பி.இ/பிடெக் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், இந்த கூடுதல் கல்வித் தகுதி வேலையை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது.

தேர்ந்தெடுக்கும் முறை:

விண்ணப்பதாரரர்கள் நேர்காணல் தேர்வு மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
  • அஞ்சல் முகவரி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வரும் 10.10.2022 தேதி முதல் பார்வையிடுங்கள்.

கிராம உதவியாளர் பணிக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? 

tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும். பின் அவற்றில் கிராம உதவியாளர் பணிகளுக்கான அறிவிப்பை கண்டறியவும். பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும். தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.

கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு நடைபெறும் முறை

இதற்கான எழுத்துத்திறன் தேர்வை கண்காணிக்க தாலுகா அளவில் துணை கலெக்டரை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும். கிராமத்தை பற்றிய விவரங்கள் அல்லது நில வகைப்பாடுகள் அல்லது கிராம கணக்குகள் அல்லது மாவட்ட கலெக்டர் கூறும் தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுத செய்யலாம்.

வாசிப்புத் திறனை அறிந்து கொள்வதற்காக எந்த ஒரு புத்தகத்திலும் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாசகங்களை விண்ணப்பதாரரை வாசிக்கச் சொல்லலாம். தாசில்தார்கள் மூலம், தாலுகா அளவில் மேற்கொள்ளப்படும் ஆட்கள் தேர்வு, முறையாக விதிகளை பின்பற்றி நடைபெறுகிறதா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

அறிவிப்பு வெளியாகும் நாள்

இப்பணிக்கு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!