100 Naal velai thittam Salary 2023
100 Naal velai thittam Salary 2023 தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தின்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் 294 ரூபாயாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார். இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் 2ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் குறிப்பிட்டார்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
கடந்த 2 ஆண்டு திமுக ஆட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 2.16 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றும் ரூ.190 கோடி செலவில் 149 சமத்துவபுரங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரம் மேம்பட ரூ.1000 கோடியில் தனிநபர் சமுதாய சொத்துக்கள் உருவாக்கப்படும். ரூ.1,500 கோடி ஒதுக்கீட்டில் விளிம்புநிலை மக்கள் வசிக்கும் பகுதிகளில் குடிநீர், சாலை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
100 Naal velai thittam Salary 2023 Highlights
ரூ. 1 கோடியில் 100 இளைஞர் திறன் மற்றும் வேலை வாய்ப்பு திருவிழாக்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும்.
ரூ.137 கோடியில் 10,50,000 சுய உதவிக் குழுக்களுக்கு 21 இலட்சம் முருங்கைக் கன்றுகள், ஊரகப் பகுதிகளில் இரத்த சோகையைக் குறைக்கும் பொருட்டு வழங்கப்படும்.
தூய்மைக் காவலர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் உயர்வு.66,130 ஊரகப் பகுதி தூய்மைக் காவலர்களுக்கு ரூ.3,600லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
ரூ.75 கோடியில் 5,000 சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும்.
ரூ.50 கோடியில் 1,000 ஊராட்சிகளில் நுண் தொழில் நிறுவனங்களுக்கான நிதித் திட்டம்- மகளிர், புதிய தொழில் தொடங்குவதற்கும் ஏற்கனவே உள்ள தொழிலை மேம்படுத்துவதற்கும் செயல்படுத்தப்படும்.
ரூ. 3 கோடியில் 100 மதி எக்ஸ்பிரஸ் வாகனங்கள் – சிறப்பு சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய வழங்கப்படும்.
ரூ.1.36 கோடியில் “வானவில் மையம்” எனும் பாலின வள மையம் 37 மாவட்டங்களில் முன் மாதிரியாக அமைக்கப்படும்.
ரூ. 1 கோடியில் 100 இளைஞர் திறன் மற்றும் வேலை வாய்ப்பு திருவிழாக்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும்.