sbi asha scholarship program 2022 in tamil
இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ வங்கியில் ஏழை குழந்தைகளின் கல்விக்காக எஸ்.பி.ஐ ஆஷா ஸ்காலர்ஷிப் திட்டம் 2022 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்த விவரங்களும், தகுதி மற்றும் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
SBI Asha Scholarship Program 2022 in Tamil:
அரசு சார்பில் ஏழை குழந்தைகளை கல்வியில் முன்னேற்றம் வேண்டும் என்பதற்காக ஏகப்பட்ட சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு கல்வி என்பது அடிப்படையான ஒன்றாக இருக்க வேண்டும் என்பதில் அரசு குறிக்கோளுடன் இருக்கிறது. இந்நிலையில் அரசு மட்டுமில்லாமல் இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கி இருக்கிறது. அந்த வகையில் எஸ்.பி.ஐ ஆஷா ஸ்காலர்ஷிப் திட்டம் 2022 என ஏழை குழந்தைகளின் கல்விக்காக புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
அதன் படி எஸ்.பி.ஐ அறக்கட்டளையின் கல்வி சார்ந்த ஒருங்கிணைந்த கற்றல் இயக்கத்தின் கீழ் இந்தியா முழுவதும் உள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்கு அவர்களின் கல்வியை தொடர நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 15000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த ஸ்காலர்ஷிப் திட்டத்தை Buddy4Study நிறுவனம் பங்குதாரராக இருந்து செயல்படுத்துகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் 15 அக்டோபர் 2022.
sbi asha scholarship program 2022 in tamil Details
Name of the Scholarship | SBI Asha scholarship program 2022 |
Scholarship Amount | Rs.15,000 Per year |
Eligible Students | Class 6 to 12th |
Income Details (Family Income) | Less than 3,00,000 |
Mark Percentage | 75 % |
Last Date for Submitting SBI Asha Scholarship Scholarship | 15.10.2022 |
sbi asha scholarship program 2022 in tamil Eligibility
தகுதிகள்:
- இந்த திட்டத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பலன் பெறுவார்கள்.
- விண்ணப்பதாரர்கள் முந்தைய கல்வியாண்டில் குறைந்தபட்சம் 75% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3,00,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
தேவையான ஆவணங்கள்:
- மாணவர்களின் முந்தைய கல்வியாண்டின் மதிப்பெண் பட்டியல்
- மாணவரின் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாளச் சான்று (ஆதார் அட்டை/வாக்காளர் அடையாள அட்டை/ஓட்டுநர் உரிமம்/பான் அட்டை)
- நடப்பு ஆண்டு சேர்க்கை சான்று (கட்டண ரசீது / சேர்க்கை கடிதம் / நிறுவன அடையாள அட்டை / நம்பகத்தன்மை சான்றிதழ்)
- விண்ணப்பதாரரின் (அல்லது பெற்றோர்) வங்கி கணக்கு விவரங்கள்
- வருமானச் சான்று (படிவம் 16A/அரசு அதிகாரத்தின் வருமானச் சான்றிதழ்/சம்பளச் சீட்டுகள் போன்றவை)
- விண்ணப்பதாரரின் புகைப்படம்
விண்ணப்பிக்கும் முறை:
- முதலில் https://www.buddy4study.com/page/sbi-asha-scholarship-program?ref=HomePageBanner இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
- ஏற்கனவே பதிவு செய்தவர் என்றால், உங்கள் பதிவு செய்யப்பட்ட ஐடியுடன் Buddy4Study இல் உள்நுழைந்து, ‘விண்ணப்பப் படிவம் பக்கத்தை ‘ பார்க்கலாம்.
- ஏற்கனவே பதிவு செய்யவில்லை என்றால் – Buddy4Study இல் உங்கள் மின்னஞ்சல்/மொபைல்/ஜிமெயில் கணக்குடன் பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.
- நீங்கள் இப்போது ‘SBI ஆஷா ஸ்காலர்ஷிப் திட்டம் 2022’ விண்ணப்பப் படிவப் பக்கத்திற்குத் திருப்பி விடப்படுவீர்கள்.
- விண்ணப்ப செயல்முறையைத் தொடங்க, ‘விண்ணப்பத்தைத் தொடங்கு’ பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
- ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும். அதன் பின் தொடர்புடைய ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும்.
- அதன் பின் ‘விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை’ ஏற்று, ‘ப்ரிவியூ’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- விண்ணப்பதாரர் பூர்த்தி செய்த அனைத்து விவரங்களும் முன்னோட்டத் திரையில் சரியாகக் காட்டப்பட்டால், விண்ணப்ப செயல்முறையை முடிக்க ‘சமர்ப்பி’ பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
- எஸ்.பி.ஐ ஆஷா உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க கடைசி அக்டோபர் 15, 2022 ஆகும்.
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Click here | |
Telegram | Click here |