TN School Books and Accessories
தமிழக பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
TN School Books and Accessories தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், 2023 – 2024 ஆம் கல்வி ஆண்டுக்காக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படவிருந்தன. அதே சமயம், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் வகுப்பறைகளில் அமர்வது கடும் சிரமம் என்று 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்திருந்தார்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
தொடர்ந்து வெயிலின் தாக்கம் குறையாததால் அமைச்சர் அன்பில் மகேஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் மீண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு வெளியிட்ட உத்தரவில், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12 ஆம் தேதியும், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 14 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடப்புத்தகங்கள்
திண்டுக்கல்லில் உள்ள பாடநூல் கழக கிடங்கில் பாடநூல் புத்தகங்கள் பள்ளிக்கு அனுப்பும் பணியை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, ”தமிழகத்தில் பள்ளிகள் தொடங்கிய ஒரு வாரத்திலேயே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குப் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். பாடநூல்களைப் பொறுத்தவரையில் தட்டுப்பாடு என்பது கிடையாது. அனைவருக்கும் அரசின் இலவசப் புத்தகங்கள் கிடைக்கும்” என்றார்
மாணவர்கள் பள்ளிக்கு வந்த முதல் நாளே இலவச பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், மாணவர்களுக்கு நாளை முதல் மதிய உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக பள்ளிகல்வித்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இலவச கல்வி உபகரணங்கள் – முதலமைச்சர் தொடங்கி வைப்பார்!
தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய மூன்று கோடியே 56 லட்சம் புத்தகங்கள் தயார் நிலையில் அனுப்பப்பட்டு விட்டன. இலவச பாட புத்தகங்கள் மட்டுமின்றி 11 கல்வி உபகரணங்களையும் மாணவர்களுக்கு இலவசமாக தமிழக அரசு வழங்க உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் இத்திட்டத்தை தொடங்கி வைப்பார் என்று அமைச்சர் பெரியசாமி மற்றும் பாடநூல் கழகத் தலைவர் லியோனி ஆகியோர் கூறியுள்ளனர். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தற்போது பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன.
- குறிப்பாக ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகள் படித்தால் அவர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வியில் 7.5% இட ஒதுக்கீடு கிடைக்கும்.
- மேலும் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க முன்வர வேண்டும்
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Click here | |
Telegram | Click here |
Latest Government Jobs 2023 – Click here to apply.