siru thaniyangal benefits in tamil
சிறுதானியங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
இன்றைய பதிவில் சிறுதானியத்தின் வகைகள் அதன் பயன்களை பற்றி தெரிந்துகொள்வோம். நம் வீட்டில் உள்ள முன்னோர்கள் ஆரோக்கியமாகவும், அழுத்தமாகவும் இருப்பார்கள். அவர்கள் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று நினைத்திருக்கீர்களா.! அந்த காலத்தில் உள்ளவர்கள் எல்லாம் சத்தான உணவுகளை தான் சாப்பிடுவார்கள். ஆனால் இன்றைய அவசர கால கட்டத்தில் இருப்பதால் பாஸ்ட் புட் தேடி செல்கிறோம் சாப்பிட்டால் போதும் என்று நினைக்கிறார்கள். ஆரோக்கியமாக இருப்பதற்கு என்ன சாப்பிட வேண்டும் என்று யோசிப்பதில்லை. நம் தாத்தா, பாட்டி மாதிரி எல்லாம் ஆரோக்கியமாக இருக்க நினைத்தால் ஒரு வகை தானியமாவது உணவில் சேர்த்து கொள்ளுங்கள். தானியத்தின் வகைகளும் அதன் நன்மைகளும் படித்து தெரிந்து கொள்ளுவோம்.
பாரம்பரிய நெல் வகைகள் பெயர்கள் சிறுதானிய வகைகள் பெயர்கள்:
இன்றைய கால கட்டத்தில் சிறு தானியம் என்றாலே பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. ஏனென்றால் உணவில் அதிகம் சேர்ப்பதில்லை. சுவையாகவும், சீக்கிரமாகவும் உணவு செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் நாம் செய்வது ஆரோக்கியமானதா இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. சிறு தானியத்தில் பல நன்மைகள் இருக்கிறது. அதாவது தானியத்தில் புரத சத்து, நார் சத்து, இரும்பு சத்து, கால்சியம் சத்து, போன்றவை அதிகம் நிறைந்துள்ளது.
siru thaniyangal benefits in tamil
சாமை:
சாமை சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடுவது நல்லது. இரத்த சோகையை சரி செய்யும். மற்றும் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளையும் சரி செய்யும்.
தினை:
தினையில் புரத சத்து, நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, பாஸ்பரஸ், மாவுச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை சாப்பிட்டால் இதயத்தை ஆரோக்கியமாகவும், கண்கள் சிறப்பாக தெரிவதற்கு வழி வகுக்கிறது. அதுமட்டுமில்லாமல் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு உதுவுகிறது. எப்படியென்றால் தாய்ப்பால் சுரப்பதற்கு வழி செய்கிறது. வாயு பிரச்சனையிலுருந்து விடுவிக்கிறது.
குதிரைவாலி:
குதிரை வாலியில் இரும்பு சத்து, நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இதை சாப்பிடுவதால் புற்று நோய், உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை வராமல் தடுக்கலாம். இடுப்பு வலி, வயிற்று வலி வரும் நேரங்களில் குதிரைவாலியை சாப்பிடுவது வலியை குறைக்க செய்யும்.
கம்பு:
கம்பு தானியத்தில் வைட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது. இதை சாப்பிட்டால் உடல் வெப்பத்தை குறைக்கும். நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். வயிற்று புண் வராமல் தடுக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
கேழ்வரகு:
கேழ்வரகில் இரும்பு சத்து, நார்ச்சத்து, வைட்டமின் பி போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. எலும்பு தேய்மானம், இரத்த சோகை, சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த மருந்தாக கேழ்வரகு இருக்கும்.
சோளம்:
சோளத்தில் புரத சத்து, நார்ச்சத்து நிறைந்துள்ளது. சர்க்கரை நோய், செரிமான கோளாறு, இரத்த சோகை பிரச்சனையில் உள்ளவர்களுக்கு சோளம் சிறந்த மருந்தாக இருக்கும். மற்றும் உடலில் உள்ள உப்பின் அளவை சீராக வைக்கும். ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை உள்ள பெண்களுக்கு சோளம் சிறந்த மருந்தாக இருக்கும். சிறு தானியத்தில் எத்தனை நன்மைகள் இருக்கிறது என்று படித்து தெரிந்து கொண்டீர்களா.! இனி வரும் நாட்களிலாவது சிறு தானியங்களை சேர்த்து உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருங்கள்.