Tamil Motivational Quotes for Success

Tamil Motivational Quotes for Success

Dear friends

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

We have added tamil motivational quotes for succes. Kindly share it with your friends

Thank you

Tamil Motivational Quotes for Success

ஒரு சிறிய அன்பை குழந்தைகளிடம் செலுத்திப் பாருங்கள், அதற்கான பெரிய பலனை அவர்களிடமிருந்து திரும்பப் பெறுவீர்கள்

தரம் என்பது ஒருபோதும் எதிர்பாராமல் நிகழ்வது அல்ல; அது எப்போதும் ஒரு அறிவார்ந்த முயற்சியின் விளைவே.

அனுபவம், அறிவு மற்றும் ஆர்வம் ஆகிய ஒன்றுபட்ட சக்திகளின் செயல்பாடே திறமை எனப்படுகிறது.

நாம் அனைவருமே பள்ளத்தில்தான் இருக்கிறோம், ஆனால் நம்மில் சிலரே நட்சத்திரங்களைப் பார்க்கிறார்கள்.

வெற்றி என்பது ஒரு அறிவியல்; அதற்கான நிபந்தனைகள் உங்களிடம் இருந்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

முடியாது என்ற வார்த்தை முட்டாள்களின் அகராதியில் மட்டுமே காணக்கூடிய ஒன்று.

சிந்திப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள், ஆனால் நடவடிக்கைக்கான நேரம் வரும்போது சிந்தனையை நிறுத்திவிடுங்கள்.

சோர்விலும் பொறுமையாக இருப்பதே ஒரு வீரனுக்கான முதல் தகுதி; தைரியம் என்பது இரண்டாவது தகுதியே.

வெற்றி கிடைக்குமோ என்ற அச்சம், கண்டிப்பாக தோல்வியை நோக்கியே கொண்டுசெல்லும்.

வாழ்வில் வெற்றி பெற, நமக்கு இரண்டு விஷயங்கள் தேவை; ஒன்று அறியாமை மற்றொன்று நம்பிக்கை

ஒரு செயலில் மேல்நோக்கி செல்வதற்கான ரகசியம், முதலில் அதைச் செய்ய தொடங்குவதுதான்.

நாளை மறுநாள் என்ன செய்ய வேண்டும் என்பதை, நாளை வரை தள்ளி வைக்காதீர்கள்.

உங்கள் கற்பனையின் கவனம் கட்டுப்பாட்டில் இல்லாதபோது, நீங்கள் உங்கள் கண்களை நம்பியிருக்க முடியாது.

வயது, ஒரு மனம் சார்ந்த பிரச்சினை, நீங்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை என்றால், அது ஒரு பெரிய விஷயமே இல்லை.

நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க சிறந்த வழி, மற்றவரை மகிழ்ச்சிப்படுத்த முயற்சிப்பதே

tamil motivational quotes for success
tamil motivational quotes for success

பொறுமை மற்றும் நேரம் ஆகியவையே, மிகவும் சக்தி வாய்ந்த வீரர்களுக்கு இணையானது.

எல்லோரும், உலகம் மாறவேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, தான் மாறவேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை.

மனிதனின் மனம் எதை நம்பிக்கையுடன் திட்டமிடுகிறதோ, அதை அடைந்தே தீரும்.

உங்களால் பெரிய விஷயங்களைச் செய்யமுடியவில்லை என்றால், சிறிய விஷயங்களைச் சிறந்த வழியில் செய்து பாருங்கள்.

முயற்சியில்லாதவர்கள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை; வெற்றியாளர்கள் ஒருபோதும் முயற்சியை விடுவதில்லை.

நமது இலக்கு என்பது, காலக்கெடுவுடன் கூடிய கனவே.

விருப்பமே, அனைத்து வெற்றிகளுக்குமான முதல் படியாகும்.

உங்களுக்கான மிகப்பெரிய வாய்ப்பானது, நீங்கள் இப்பொழுது எங்கிருக்கீறீர்களோ அங்கேயேகூட இருக்கலாம்.

பேசுவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்ளுங்கள், ஏனென்றால் உங்கள் வார்த்தைகள் மற்றொருவரின் மனதில் வெற்றி அல்லது தோல்விக்கான விதையை விதைக்கக்கூடும்.

தொடர்ச்சியான முயற்சி மற்றும் போராட்டத்தின் மூலமே, வலிமை மற்றும் வளர்ச்சி நமக்கு கிடைகின்றது.

போராட்ட குணத்தைக் கைவிட மறுப்பவர்களுக்கு, வெற்றி எப்பொழுதும் சாத்தியமே.

ஒழுக்கமே, இலக்குகளுக்கும் சாதனைகளுக்கும் இடையேயான பாலமாகும்.

நீங்கள் உங்கள் வாழ்க்கையைத் திட்டமிடவில்லை என்றால், வாய்ப்புகள் உங்களை வேறு ஒருவரின் திட்டத்தில் விழ வைக்கும்.

நீங்கள் அசாதாரணமான ஒரு செயலுக்குத் தயாராகவில்லை என்றால், சாதாரண நிலையிலேயே இருந்துவிட வேண்டியதுதான்

மகிழ்ச்சி என்பது எதிர்காலத்திற்காக ஒத்திவைக்கும் ஒன்றல்ல, அது நிகழ்காலத்திற்காக உருவாக்க வேண்டிய ஒன்று.

வெற்றியானது ஒரு சில எளிய நல்ல பழக்கங்களை ஒவ்வொரு நாளும் பயிற்சி செய்வதே தவிர வேறொன்றுமில்லை.

சின்ன சின்ன நல்ல விஷயங்களைச் சேர்த்துக்கொண்டே முன்னேறுங்கள், அதுவே இறுதியில் நம்மை முழுமையானதாக மாற்றுகின்றது.

வாழ்க்கையின் முக்கியமான மதிப்பு, நீங்கள் எதைப் பெறுகிறீர்கள் என்பதல்ல, நீங்கள் என்னவாக ஆகிறீர்கள் என்பதே.

உங்களுக்கு புதிதாக ஏதாவது வேண்டுமானால், நீங்கள் செய்யும் பழைய செயலை முதலில் நிறுத்த வேண்டும்.

எதிர்காலம் பற்றி நமக்கு தெரியும் ஒரே விஷயம், அது மாறுபட்டதாக இருக்கும் என்பது மட்டுமே.

வெற்றிபெற்ற மனிதனாக ஆவதற்கு முயற்சி செய்யாதீர்கள்! மாறாக மதிப்புமிக்க மனிதனாக மாற முயலுங்கள்.

தவறுகளே செய்யாத ஒருவன் இருக்கிறானென்றால், அவன் புதிதாக எதையுமே முயற்சிக்கவில்லை என்று அர்த்தம்.

எல்லாவற்றுக்கும் முன்னால் வெற்றியைப் பெற தயாராவதுதான் வெற்றியைப் பெறுவதற்கான முதல் படி.

நேர்மை மட்டுமே ஒருவனை சிறந்த தலைவனாக்காது என்பது நிச்சயமான உண்மை. ஆனால், நேர்மையின்மை ஒருவனை நிச்சயமாய் தலைவனாக்காது.

தோல்வியிலிருந்து நீங்கள் எதையாவது உருப்படியாகக் கற்றுக்கொண்டீர்கள் என்றால் நீங்கள் தோற்கவே இல்லை!

அடுத்தவர்களை நீங்கள் உற்சாகப்படுத்தும்போது உங்களுக்குள்ளும் உற்சாகம் ஊற்றெடுக்கின்றது. உற்சாகமே மனிதர்களின் நடுவே வித்தியாசத்தைக் காட்டுகின்றது.

தவறுகளும் வெற்றிகளுக்கு இணையான ஆசான்களே.

உங்கள் நம்பிக்கையை வைத்து முழுமையாக வாழுங்கள். உலகத்தையே உங்களால் புரட்டிப்போட முடியும்.

ஒரே ஒரு முறை நடந்தால் அது தடமாக மாறாது. அதே போல் ஒரு விஷயத்தை ஒரே ஒரு முறை சிந்திப்பதன் மூலம் நமக்கு சரியான யோசனை கிடைக்காது.

ஒரு மென்மையான வார்த்தை, ஒரு கனிவான பார்வை, ஒரு நல்ல புன்னகை ஆகியவற்றால் அதிசயங்கள் மற்றும் அற்புதங்களை நிகழ்த்த முடியும்.

எந்த அளவு நம்பிக்கை உள்ளதோ அந்த அளவிற்குத் திறமை உண்டு.

நீங்கள் வெல்ல முடியும் என்று நினைத்தால், கண்டிப்பாக உங்களால் வெல்ல முடியும்; வெற்றிக்கு அவசியம் நம்பிக்கையே.

சிறந்த சாதனைகளைச் செய்ய நாம் உழைத்தால் மட்டும் போதாது, கனவு காண வேண்டும்; திட்டமிட்டால் மட்டும் போதாது, நம்பிக்கையும் வேண்டும்.

ஒருபோதும் தோல்வியடையாமல் இருப்பதில் நமக்குப் பெருமை இல்லை; ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் எழுவதிலேயே இருக்கின்றது.

ஒவ்வொரு நாளும் ஆண்டின் சிறந்த நாளென்று உங்கள் இதயத்தில் எழுதிக் கொள்ளுங்கள்.

நேற்று என்பது இன்றைய நினைவு மற்றும் நாளை என்பது இன்றைய கனவு.

திட்டங்கள் என்பதில் எதுவும் இல்லை; திட்டமிடல் என்பதிலேயே எல்லாம் இருக்கின்றது.

பலத்தால் மட்டுமே ஒத்துழைக்க முடியும், பலவீனத்தால் மன்றாடவே முடியும்.

மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே,

தோல்வி பல கடந்துவென்றவர்களே…

ஒரு விஷயத்தைஉன்னால் கனவு காண முடியுமானால்அதனை உன்னால் செய்யவும் முடியும்.

அதிகாலை நீ நினைத்தநேரத்தில் எழுந்து விட்டாலேதோல்விகள் உன்னை விட்டுஒதுங்கி கொள்ளும்!

தோல்வி அடைந்தவன்மாற்ற வேண்டியதுவழிகளைத்தான்இலக்கை இல்லை!

திறமைகள் எல்லோரிடமும் இருக்கிறதுஆனால் அதை செயல்படுத்தும் விதத்தில் தான்உனக்கான இடம் தோல்வியா வெற்றியா என்பது அமைகிறது.

சிக்கல்களை எதிர்கொள்ளு போதுகூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.

Check our Latest Updates

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!