TN Scholarship Scam News
மாணவர்களை குறிவைக்கும் மோசடி கும்பல்
TN Scholarship Scam News தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி படிப்பை முடித்த மாணவர்களின் பெற்றோர்களை தொடர்பு கொள்ளும் சிலர், கல்வி உதவித் தொகை வழங்கும் துறையில் இருந்து பேசுவதாகவும், தங்களது குழந்தை அரசின் கல்வி உதவித் தொகையை பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறி ஏமாற்றி வருகின்றனர். அதனை பெறுவதற்கு பல்வேறு காரணங்களை கூறி ‘க்யூஆர்’ கோடை அனுப்பி ஏமாற்டுகின்றனர். மேலும், ஆள்மாராட்டம் செய்து போலியான ஆவணங்களை தயார் செய்தும், அதை அவர்களுக்கு அனுப்பி நம்ப வைத்தும் ஏமாற்றிவிட்டு சதி செய்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டு அனைவரையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள பிதம்புரா பகுதியில் தங்கி பொது மக்களிடம் எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்பதை பற்றி பயிற்சி பெற்று பின்னர் பொதுமக்களை ஏமாற்றி பணத்தைப் பற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அதே பாணியில் தமிழ்நாட்டில் உள்ள தங்களது சொந்த ஊருக்கு வந்து அரசு கல்வி உதவித் தொகை வழங்கும் துறையில் (கவர்மெண்ட் ஸ்காலர்ஷிப் டிபார்ட்மெண்ட்) இருந்து பேசுவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றி மோசடி செய்யும் 5 பேரை கோவை மாநகர காவல் ஆணையாளரின் உத்தரவின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பேங்க் பாஸ்புக், 7 செக் புக், ஏடிஎம் கார்டுகள், 7 சிம் கார்டு 22 மொபைல் 44 பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், கல்வி உதவி தொகை தருவதாக கூறி பல லட்ச ரூபாய் ஆன்லைன் மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கடந்த மாதத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்த மாணவ மாணவிகள் குறித்த தகவல்களை ஒரு கும்பல் திரட்டி உள்ளது. சம்பந்தப்பட்ட மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு அவர்கள் போன் செய்து அரசு கல்வி உதவித்தொகை பெற தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், பின்னர் சம்பந்தப்பட்ட பெற்றோரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு போன் செய்த அவர்கள் இந்த கல்வி உதவித் தொகையை பெற 2000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.
அதற்கான க்யூ.ஆர். ஸ்கேன் கோடு வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறினர். இதை நம்பிய பெற்றோர் அந்த வாட்ஸ் அப் எண்ணுக்கு 2000 ரூபாய் செலுத்தி உள்ளனர். பணம் செலுத்திய ஒரு சில நாட்களில் அவர்களது வங்கி கணக்கில் வைக்கப்பட்டு இருந்த மொத்த தொகையும் மர்ம நபர்களால் தங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது .இதை அறிந்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதை தொடர்ந்து ஒவ்வொருவரும் தனித்தனியாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். ஒரே மாதிரியான புகார் வந்ததை அடுத்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில அரசு கல்வி உதவித் தொகை தருவதாக கோரி மாணவர்களின் பெற்றோர்கள் வங்கி கணக்கில் இருந்த தொகையை முழுவதுமாக மோசடியாக தங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்த நபர்கள் நாமக்கல் சௌரிபாளையம் சேர்ந்த கும்பல் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் நாமக்கல் மாவட்டம் சவுரி பாளையத்தை சேர்ந்த ஜான் ஜோசப் என்பவரின் மகன் டேவிட் (32 ) புஷ்பராஜ் என்பவரின் மகன் லாரன்ஸ் ராஜ்( 28), ஜான் ஜோசப் என்பவரின் மகன் ஜேம்ஸ் (30), ஆரோக்கியசாமி என்பவரின் மகன் எட்வின் சகாயராஜ் (31) அங்கமுத்து என்பவரின் மகன் மாணிக்கம்( 34) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்த மோசடி செயலுக்காக டெல்லி சென்று இதேபோல மோசடி செயலில் ஈடுபட்டு வரும் கும்பலிடம் சிறப்பு பயிற்சி பெற்று வந்து இந்த செயலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுவரை 10 பேரிடம் புகார் பெற்றுள்ளதும் இவர்களது வங்கி கணக்கில் சில லட்ச ரூபாய் மட்டுமே மோசடி செய்யப்பட்டுள்ளது என்பதும் தெரிய வந்தது .ஆனால் இந்த மோசடி கும்பல் 500″க்கும் மேற்பட்டோர் இடம் மோசடி செய்த அதிர்ச்சி தகவலும் கிடைத்துள்ளது. பிடிபட்ட நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர்களுக்கும் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Click here | |
Telegram | Click here |
